உள்துறை அமைச்சர் அமித் ஷா
உள்துறை அமைச்சர் அமித் ஷா

இந்தியாவில் பல கட்சி ஜனநாயக முறை தோற்றுள்ளது: சர்ச்சைக்குத் திரி கிள்ளியுள்ள அமித் ஷாவின் பேச்சு 

இந்தியாவில் பல கட்சி ஜனநாயக முறை தோற்றுள்ளது என்று தில்லியில் நடந்த நிகழ்ச்சியொன்றில், மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா பேசியுள்ளது சர்ச்சைக்குத் திரி கிள்ளியுள்ளது.
Published on

புது தில்லி: இந்தியாவில் பல கட்சி ஜனநாயக முறை தோற்றுள்ளது என்று தில்லியில் நடந்த நிகழ்ச்சியொன்றில், மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா பேசியுள்ளது சர்ச்சைக்குத் திரி கிள்ளியுள்ளது.

செவ்வாயன்று தில்லியில் நடந்த நிகழ்ச்சியொன்றில் மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா கலந்து கொண்டார். அங்கே அவர் பேசியதாவது:

70 ஆண்டு கால சுதநதிர இந்தியாவில் 'பலகட்சி ஜனநாயக முறை' தோற்று விட்டது என்ற எண்ணம் மக்களிடையே எழுந்துள்ளது. அதேபோல இந்த முறையால் நமது இலக்குகளை எட்ட முடியுமா என்ற சந்தேகமும் அவர்களிடையே எழுந்துள்ளது.

பல்வேறு நாடுகளில் உள்ள பல கட்சி முறைகளை ஆராய்ந்த பின்னர்தான் நமது அரசியலமைப்பில் பல கட்சி ஜநாயக முறை சேர்க்கப்பட்டது.

30 ஆண்டுகள் ஆட்சி செய்தாலும் ஒரு திட்டத்தை மட்டுமே செயல்படுத்தும் அரசுகள் மத்தியில், பிரதமர் மோடி தலைமையிலான அரசு 5 ஆண்டுகாலத்தில் ஜிஎஸ்டி, பணமதிப்பிழப்பு உள்ளிட்ட 50 பெரிய திட்டங்களை அமல்படுத்தியுள்ளது.

பிரதமர் மோடி தலைமையிலான அரசு வாக்கு வங்கிக்காக அல்லாமல் மக்களின் நலனுக்காகவே எந்த முடிவையும் எடுத்துள்ளது.

இவ்வாறு அவர் பேசியுள்ளார்.

அவரது இந்த பேச்சினால் "ஒரே நாடு ..ஒரே கட்சி" என்ற நிலையை நோக்கி இந்தியா நகர்த்திச் செல்லப்படுகிறதா என்ற கேள்வி எழுந்துள்ளது.       

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

X
Dinamani
www.dinamani.com