பிரதமர் மோடி பிறந்தநாள்: 1.25 கிலோ தங்கக் கிரீடம், 69 அடி நீள கேக்

பிரதமர் நரேந்திர மோடியின் பிறந்தநாளை முன்னிட்டு அவரது ஆதரவாளர்கள் 1.25 கிலோ தங்கக் கிரீடம் மற்றும் 69 கிலோ கேக் உள்ளிட்டவற்றை தயாரித்தனர்.
பிரதமர் மோடி பிறந்தநாள்: 1.25 கிலோ தங்கக் கிரீடம், 69 அடி நீள கேக்
Updated on
1 min read

பிரதமர் நரேந்திர மோடியின் பிறந்தநாளை முன்னிட்டு அவரது ஆதரவாளர்கள் 1.25 கிலோ தங்கக் கிரீடம் மற்றும் 69 கிலோ கேக் உள்ளிட்டவற்றை தயாரித்தனர்.

பிரதமர் நரேந்திர மோடி செவ்வாய்க்கிழமை 69-ஆவது வயதில் அடியெடுத்து வைக்கிறார். இதையடுத்து அவருக்கு பல்வேறு அரசியல் கட்சித் தலைவர்கள் உட்பட அனைவரும் தங்கள் வாழ்த்தினை தெரிவித்து வருகின்றனர். 

இந்நிலையில், மத்தியப்பிரதேச மாநிலம் போபாலில் அவருடைய 69-ஆவது வயதை குறிக்கும் விதமாக 69 அடி நீள கேக் தயாரித்து அனைவருக்கும் வழங்கி அப்பகுதி பாஜக-வினர் செவ்வாய்கிழமை கொண்டாடினர்.

அதுபோன்று, பிரதமராக 2-ஆவது முறையாக நரேந்திர மோடி பதவியேற்றால், தங்கக் கிரீடம் சாற்றுவதாக அவருடைய ஆதரவாளர் ஒருவர் ஹனுமன் கோயிலில் வேண்டிக்கொண்டுள்ளார். 

இந்நிலையில், வேண்டுதலை நிறைவேற்றும் விதமாக பிரதமர் மோடியின் பிறந்தநாளை முன்னிட்டு வாராணசியில் உள்ள சங்கத் மோச்சன் கோயிலில் உள்ள ஹனுமனுக்கு 1.25 கிலோ தங்கக் கிரீடத்தை சமர்பித்து பிரதமருக்காக வேண்டிக்கொண்டார்.  

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com