இ- சிகரெட்டுக்குத் தடை எந்த அடிப்படையில் எடுக்கப்பட்ட முடிவு? பிரதமரின் பொருளாதார ஆலோசனைக் குழு உறுப்பினர் கேள்வி

இ- சிகரெட்டுக்குத் தடை என்பது எந்த அடிப்படையில் எடுக்கப்பட்ட முடிவு?  என்று பிரதமரின் பொருளாதார ஆலோசனைக் குழு உறுப்பினர் ஷமிகா  ரவி கேள்வி எழுப்பியுள்ளார்.
பொருளாதார ஆலோசனைக் குழு உறுப்பினர் ஷமிகா  ரவி
பொருளாதார ஆலோசனைக் குழு உறுப்பினர் ஷமிகா ரவி

புது தில்லி: இ- சிகரெட்டுக்குத் தடை என்பது எந்த அடிப்படையில் எடுக்கப்பட்ட முடிவு?  என்று பிரதமரின் பொருளாதார ஆலோசனைக் குழு உறுப்பினர் ஷமிகா  ரவி கேள்வி எழுப்பியுள்ளார்.

அமெரிக்கா உள்ளிட்ட நாடுகளில் புழக்கத்தில் இருந்து வரும் இ- சிகரெட்டுகள் தற்போது இந்தியாவிலும் பரவி வருவதால் அதற்குத் தடை விதிக்க வேண்டும் என்று பலர் வலியுறுத்தி வருகின்றனர்.

இந்த நிலையில், இ- சிகரெட்டுகளுக்கான உற்பத்தி, ஏற்றுமதி & இறக்குமதி, சேமித்து வைத்திருப்பது, விளம்பரம் உள்ளிட்ட அனைத்திற்கும் தடை விதிக்க மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது. இந்தத் தகவலை மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் புதனன்று வெளியிட்டுள்ளார். 

இதுதொடர்பாக தில்லியில் செய்தியாளர்களிடம் பேசிய அவர், 'நாட்டில்  இ- சிகரெட்டுகளின் தயாரிப்பு, விற்பனைக்கு தடை விதிக்க மத்திய அமைச்சரவை இன்று ஒப்புதல் அளித்துள்ளது. இதற்கு குடியரசுத் தலைவரின் ஒப்புதல் பெறப்பட்டு விரைவில் அமலுக்கு வரும். குளிர்காலக் கூட்டத்தொடரில் இது தொடர்பான மசோதாவும் நாடாளுமன்றத்தில் நிறைவேற்றப்படும்.  

தடையை மீறி இ - சிகரெட்டுகளை தயாரித்தலோ, விற்பனை செய்தாலோ தனிநபர் என்றால் 1 வருடம் சிறைத்தண்டனை அல்லது 1 லட்சம் ரூபாய் அபராதம் விதிக்கப்படும். தொடர்ந்து இதே தவறை செய்யும் பட்சத்தில் 3 வருடம் சிறைத்தண்டனை அல்லது 5 லட்சம் ரூபாய் அபராதம் அல்லது இரண்டுமே வழங்கப்படும்' என்றார். 

இந்நிலையில் இ- சிகரெட்டுக்குத் தடை என்பது எந்த அடிப்படையில் எடுக்கப்பட்ட முடிவு?  என்று பிரதமரின் பொருளாதார ஆலோசனைக் குழு உறுப்பினர் ஷமிகா  ரவி கேள்வி எழுப்பியுள்ளார்.

இதுதொடர்பாக அவர், 'மற்ற புகையிலைப் பொருட்களுக்கு தடையில்லாதபோது, அதிக வரிவிதிக்க முடியும் என்ற சூழலில் இ-சிகரெட்டுகளை மட்டும் தடை செய்வது வினோதமானது. ஆரோக்கியம் மற்றும் நிதி அடிப்படையில் இந்த முடிவு எடுக்கப்படவில்லை எனும் போது எந்த அடிப்படையில் ஏடுக்கப்பட்டது?' என்று கேள்வி எழுப்பியுள்ளார். 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com