ஹிந்துக்களுக்கு எதிரான ஆபாசப் பேச்சு: பாபர் மசூதி வழக்கில் தொடர்புடையவர் மீது வழக்குப்பதிய உத்தரவு

ஆபசமாகப் பேசியதுடன், அனைவரும் தனக்கு பயந்தவர்கள் என்று மிரட்டல் விடுத்ததாக வர்திகா சிங் தனது மனுவில் குறிப்பிட்டிருந்தார். 
ஹிந்துக்களுக்கு எதிரான ஆபாசப் பேச்சு: பாபர் மசூதி வழக்கில் தொடர்புடையவர் மீது வழக்குப்பதிய உத்தரவு

ஹிந்துக்களுக்கு எதிரான ஆபாசப் பேச்சு மற்றும் கொலை மிரட்டல் உள்ளிட்டவை தொடர்பாக பாபர் மசூதி வழக்கு விவகாரத்தில் முக்கியமானவர்களில் ஒருவரான இக்பால் அன்சாரி மீது வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொள்ள உத்தரப்பிரதேசத்தின் அயோத்தி நீதிமன்றம் அம்மாநில போலீஸாருக்கு உத்தரவிட்டுள்ளது.

சர்வதேச துப்பாக்கிச்சூடு வீராங்கனை வர்திகா சிங் என்பவர் தொடர்ந்த வழக்கு மீதான விசாரணையில், அயோத்தி போலீஸ் 3 நாள்களுக்குள் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொள்ள உத்தரவிடப்பட்டுள்ளது. 

முன்னதாக, ராமர் கோயில் விவகாரம் தொடர்பாக பேசிக்கொண்டிருந்தபோது இக்பால் அன்சாரி, பிரதமர் நரேந்திர மோடி, உத்தரப்பிரதேச முதல்வர் யோகி ஆதித்யநாத் மற்றும் ஹிந்து சமூகத்தினரை ஆபசமாகப் பேசியதுடன், அனைவரும் தனக்கு பயந்தவர்கள் என்று மிரட்டல் விடுத்ததாக வர்திகா சிங் தனது மனுவில் குறிப்பிட்டிருந்தார். 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com