கர்நாடகத்தில் இடைக்காலத் தேர்தல் நடைபெற வாய்ப்பில்லை: கே.எஸ்.ஈஸ்வரப்பா

 கர்நாடக மாநிலத்தில் இடைக்காலத் தேர்தல் நடைபெறுவதற்கு வாய்ப்பில்லை என்று பஞ்சாயத்து ராஜ் மற்றும் ஊரக வளர்ச்சித் துறை அமைச்சர் கே.எஸ்.ஈஸ்வரப்பா தெரிவித்தார்.
கர்நாடகத்தில் இடைக்காலத் தேர்தல் நடைபெற வாய்ப்பில்லை: கே.எஸ்.ஈஸ்வரப்பா


 கர்நாடக மாநிலத்தில் இடைக்காலத் தேர்தல் நடைபெறுவதற்கு வாய்ப்பில்லை என்று பஞ்சாயத்து ராஜ் மற்றும் ஊரக வளர்ச்சித் துறை அமைச்சர் கே.எஸ்.ஈஸ்வரப்பா தெரிவித்தார்.
இது குறித்து வெள்ளிக்கிழமை அவர் செய்தியாளர்களிடம் கூறியது:  மாநிலத்தில் இடைக்காலத் தேர்தல் நடைபெறும் என்று எதிர்க்கட்சியினர் உள்பட  சிலர் கூறிவருகின்றனர்.  அவர்களின் எண்ணம் ஒருபோதும் பலிக்காது.  மாநிலத்தில் இடைக்காலத் தேர்தல் நடைபெறுவதற்கு வாய்ப்பு இல்லை.  காங்கிரஸ், மஜத கட்சிகளைச் சேர்ந்த 17 எம்எல்ஏக்கள் அண்மையில் தகுதி நீக்கம் செய்யப்பட்டனர்.  கூட்டணி ஆட்சியின் தோல்வியால்,  வேதனையடைந்து ஆதரவு தர மறுத்த எம்எல்ஏக்களை தகுதி நீக்கம் செய்த விவகாரத்தில் முன்னாள் முதல்வர் சித்தராமையாவின் பங்களிப்பு அதிகம் உள்ளது.   பாதிக்கப்பட்டவர்கள் தங்களுக்கு நீதி கிடைக்க வேண்டும் என்று வலியுறுத்தி, உச்ச நீதிமன்றம் சென்றுள்ளனர்.  அவர்களுக்கு நீதி கிடைக்கும் என்று நம்பிக்கை எனக்குள்ளது. 
பாஜக அரசு தனது ஆட்சிக் காலத்தை முழுமையாக பூர்த்தி செய்யும்.  அடுத்த சட்டப்பேரவைத் தேர்தலிலும், பாஜக அதிக பெரும்பான்மை பெற்று மீண்டும் ஆட்சியைப் பிடிக்கும். பிற்படுத்தப்பட்ட மக்களின் வளர்ச்சிக்குப் பாடுபட்ட மறைந்த முன்னாள் முதல்வர் தேவராஜ் அர்ஸை, தனக்கு ஒப்பாக நினைத்து முன்னாள் முதல்வர் சித்தராமையா செயல்பட்டு வருவது வேதனையளிக்கிறது.   பெல்லாரி மாவட்டத்தைப் பிரித்து, ஹொசபேட்டையை தலைநகரமாகக் கொண்டு புதிய மாவட்டம் உருவாக்குவதை வரவேற்கிறேன்.  முன்பு பாஜக ஆட்சியில் பெல்லாரி மாவட்டம் வளர்ச்சி பெற்றது.  வளர்ச்சி கண்ணோட்டத்தில் பெல்லாரியை 2 மாவட்டங்களாகப் பிரிப்பது சிறந்தது என்றார் அவர்.                                                                                
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com