காஷ்மீரில் 8,000 பிஎஸ்என்எல் சிம்கள் ஆக்டிவ்; அரசு ஊழியர்களுக்கு மட்டும் புதிய சிம்கள்

காஷ்மீரில் சுமார் 8000 பிஎஸ்என்எல் செல்போன்கள் மட்டுமே ஆக்டிவ் செய்யப்பட்டுள்ளன, அதுவும் அரசு ஊழியர்கள், காவல்துறை
காஷ்மீரில் 8,000 பிஎஸ்என்எல் சிம்கள் ஆக்டிவ்; அரசு ஊழியர்களுக்கு மட்டும் புதிய சிம்கள்


ஸ்ரீநகர்: காஷ்மீரில் சுமார் 8000 பிஎஸ்என்எல் செல்போன்கள் மட்டுமே ஆக்டிவ் செய்யப்பட்டுள்ளன, அதுவும் அரசு ஊழியர்கள், காவல்துறை அதிகாரிகளுடையது. அதோடு 4000 - 5000 புதிய தொலைபேசி இணைப்புகளும் எல்லைப் பகுதிகளில் வழங்கப்பட்டுள்ளது.

மேலும், அரசு ஊழியர்களுக்கு மட்டுமே புதிய போஸ்ட்-பெய்ட் சிம் கார்டுகள் வழங்கப்பட்டு வருவதாகவும் பிஎஸ்என்எல் அறிவித்துள்ளது.

அதே சமயம், ஹன்ட்வாரா, குப்வாரா பகுதிகளில் செல்போன்கள் வேலை செய்யாது என்றும் அரசு அறிவித்துள்ளது.

காஷ்மீரில் மட்டும் ஒட்டுமொத்தமாக 88 லட்சம் செல்போன் வாடிக்கையாளர்கள் உள்ளன. செப்டம்பர் 1ம் தேதி முதல் அரசு ஊழியர்களுக்கு மட்டுமே புதிய சிம்கள் வழங்கப்பட்டு வருகிறது. வேறு எந்த குடிமக்களுக்கும் புதிய சிம் கார்டுகள் வழங்கப்படவில்லை.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com