

அந்தமான் நிகோபர் தீவுகளில் இன்று மிதமான நிலநடுக்கம் ஏற்பட்டது.
வங்கக்கடல் பகுதியில் அமைந்துள்ள அந்தமான் நிகோபர் தீவுகளில் இன்று பிற்பகல் 2.32 மணியளவில் மிதமான நிலநடுக்கம் உணரப்பட்டது. இது ரிக்டர் அளவு கோலில் 4.8 புள்ளிகளாக பதிவானது.
இந்த நிலநடுக்கத்தின் மையம் 10 கிமீ ஆழத்தில் இருந்தது. நிலநடுக்கத்தை தொடர்ந்து சுனாமி எச்சரிக்கை எதுவும் விடுக்கப்படவில்லை. மேலும் நிலநடுக்கத்தால், சேதம் எதுவும் ஏற்பட்டதாக தற்போது வரை எந்த தகவலும் இல்லை.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.