
இந்திய விமானப்படையின் புதிய தளபதியாக ஆர்.கே.எஸ்.பதாரியா இன்று பதவியேற்றுக்கொண்டார்.
கடந்த நான்கு ஆண்டுகளாக இந்திய விமானப்படையின் தளபதியாக பதவி வகித்து வந்த பிரேந்தர் சிங் தனோவா பணியில் இருந்து ஓய்வு பெற்றார். இதையொட்டி, இன்று தனோவா, டெல்லியில் உள்ள போர் நினைவுச்சின்னத்தில் மரியாதை செலுத்தினார்.
இதையடுத்து,இந்திய விமானப்படையின் புதிய தளபதியாக ஆர்.கே.எஸ்.பதாரியா இன்று பதவியேற்றுக்கொண்டார். கடந்த சில தினங்களுக்கு முன்னதாகவே மத்திய அரசு இதுகுறித்த அறிவிப்பை வெளியிட்டிருந்தது குறிப்பிடத்தக்கது.
1978ம் ஆண்டு இந்திய விமானப்படையில் போர் விமானியாக இணைந்த பதாரியா, பல்வேறு போர் விமானங்களை திறம்பட இயக்கியவர். விமானங்களை இயக்குவதிலும், வழிகாட்டுவதிலும், எதிரி விமானங்களை தாக்குவதிலும் 'ஏ' பிரிவு தகுதி பெற்றவர். இவர் பல்வேறு பிரிவுகளில் சிறந்து விளங்கியதால், தேசிய பாதுகாப்பு அகாடமி 'Sword of Honour' என்ற பெருமையை வழங்கி சிறப்பித்துள்ளது.
கடந்த பிப்ரவரி மாதம் பாலகோட் அருகே பாகிஸ்தான் பயங்கரவாத முகாம்களை தாக்கும் திட்டத்தை வெற்றிகரமாக நிறைவேற்றியதில் பதாரியாவின் பங்கு முக்கியமானது என்பது குறிப்பிடத்தக்கது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.