
பேங்க் ஆஃப் பரோடா (பிஓபி) வங்கியுடன் தேனா, விஜயா வங்கிகளின் இணைப்பு திங்கள்கிழமை முதல் அமலுக்கு வருகிறது.
இந்த இணைப்பின் மூலம் பாரத ஸ்டேட் வங்கி, ஹெச்டிஎஃப்சி ஆகிய வங்கிகளுக்கு அடுத்த பெரிய வங்கியாக பிஓபி உருவெடுத்துள்ளது. அந்த வங்கியின் வாடிக்கையாளர்கள் எண்ணிக்கை 12 கோடியாகவும், கிளைகளின் எண்ணிக்கை 9,500-ஆகவும் அதிகரிக்கிறது. இதேபோல், ஊழியர்களின் எண்ணிக்கையும் 85,000 ஆக உயர்கிறது.
முன்னதாக, பாரத ஸ்டேட் வங்கியுடன், அதன் துணை வங்கிகளான ஸ்டேட் பேங்க் ஆஃப் பாட்டியாலா, ஸ்டேட் பேங்க் ஆஃப் பிகானீர்-ஜெய்ப்பூர், ஸ்டேட் பேங்க் ஆஃப் மைசூர், ஸ்டேட் பேங்க் ஆஃப் திருவாங்கூர், ஸ்டேட் பேங்க் ஆஃப் ஹைதராபாத் ஆகியவையும், பாரதிய மகிளா வங்கியும் கடந்த 2017-ஆம் ஆண்டில் இணைக்கப்பட்டன. இதைத் தொடர்ந்து, பேங்க் ஆஃப் பரோடா வங்கியுடன் தேனா வங்கியையும் விஜயா வங்கியையும் இணைக்க நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது குறிப்பிடத்தக்கது.