
ராஜஸ்தான் மாநிலம், ஜோத்பூர் அருகே இந்திய விமானப்படைக்கு சொந்தமான மிக்-27 ரக விமானம் தரையில் விழுந்து விபத்துக்குள்ளானது. இதில் அதிர்ஷ்டவசமாக விமானி காயமின்றி உயிர் தப்பினார்.
இதுகுறித்து விமானப்படை அதிகாரிகள் கூறியதாவது:
உதர்லாய் விமானப்படை தளத்தில் இருந்து மிக் 27 விமானம் வழக்கமான ரோந்து பணிக்காக ஞாயிற்றுக்கிழமை புறப்பட்டுச் சென்றது. நடுவானில் விமானம் பறந்தபோது, அதன் என்ஜினில் திடீரென கோளாறு நேரிட்டது. இந்நிலையில், சிரோஹி மாவட்டத்தில் உள்ள சிவ்காஞ்ச் காவல்நிலைய எல்லைக்கு உட்பட்ட பகுதியில் காலை 11.45 மணிக்கு விமானம் தரையில் விழுந்து விபத்துக்குள்ளானது. அதில் இருந்த விமானி, பாதுகாப்பு சாதனத்தை இயக்கி வெளியேறினார். இதனால் அவர் காயமின்றி உயிர் தப்பினார். விபத்துக்கான காரணம் குறித்து விசாரணைக்கு உத்தரவிடப்பட்டது. இந்த விபத்தில் உயிரிழப்போ அல்லது பொருட் சேதமோ ஏற்படவில்லை என்று முதல்கட்ட தகவல்கள் தெரிவிக்கின்றன என்று அதிகாரிகள் குறிப்பிட்டனர்.

செய்திகள் உடனுக்குடன்... வாட்ஸ்ஆப் சேனலில் 'தினமணி'யைப் பின்தொடர...