அனைத்து சுகங்களையும் அனுபவித்த பிறகு அமேதியை ராகுல் புறக்கணிப்பது ஏன்? ஸ்மிருதி இராணி

அமேதி தொகுதியை காங்கிரஸ் தலைவர் ராகுல் புறக்கணித்துவிட்டார். இதை அப்பகுதி மக்கள் யாரும் மன்னிக்க மாட்டார்கள் என்று மத்திய அமைச்சர் ஸ்மிருதி இராணி தெரிவித்துள்ளார். 
அனைத்து சுகங்களையும் அனுபவித்த பிறகு அமேதியை ராகுல் புறக்கணிப்பது ஏன்? ஸ்மிருதி இராணி

அமேதி தொகுதியை காங்கிரஸ் தலைவர் ராகுல் புறக்கணித்துவிட்டார். இதை அப்பகுதி மக்கள் யாரும் மன்னிக்க மாட்டார்கள் என்று மத்திய அமைச்சர் ஸ்மிருதி இராணி தெரிவித்துள்ளார். 

காங்கிரஸ் தலைவர் ராகுல், 2019 மக்களவைத் தேர்தலில் முதன்முறையாக உத்தரப்பிரதேசத்தின் அமேதி மட்டுமல்லாது கேரளாவின் வயநாடு தொகுதியிலும் போட்டியிடுகிறார். இந்நிலையில், அமேதியில் தேர்தல் பிரசாரத்தில் ஈடுபட்டு வரும் மத்திய அமைச்சர் ஸ்மிருதி இராணி கூறியதாவது:

அமேதி தொகுதிக்கு அதிக முக்கியத்துவம் அளித்தது யார்? அமேதி தொகுதியை அதிகமுறை பார்வையிட்டு, மக்களை சந்தித்தவர் யார்? வயநாடு தொகுதி மக்கள் எச்சரிக்கையுடன் இருப்பது நல்லது. அமேதியில் இதுவரை என்ன மாற்றம் ஏற்பட்டுள்ளது என்பதை வயநாடு மக்கள் தெரிந்துகொண்டால் போதுமானது. 

காங்கிரஸ் தலைவர் ராகுல், அமேதி தொகுதியில் தொடர்ந்து 15 வருடங்களாக பதவியில் உள்ளார். ஆனால், இப்போது மற்றொரு தொகுதியை தேர்ந்தெடுப்பது ஏன்? இது அமேதிக்கு ஏற்பட்ட அவமானம். இதனை அமேதி மக்கள் யாரும் ஏற்றுக்கொள்ளமாட்டார்கள்.

அமேதி தொகுதி மக்களால் தான் ராகுலுக்கு கடந்த 15 ஆண்டுகளாக பதவி கிடைத்தது. அனைத்து சுகங்களையும் அனுபவித்துவிட்டு அமேதி தொகுதியை ராகுல் புறக்கணித்துவிட்டார்.

ஆனால், அமேதி தொகுதியில் எனக்கு மீண்டும் ஒரு வாய்ப்பு வழங்கியுள்ள பாஜக தலைமைக்கு நான் நன்றி தெரிவித்துக்கொள்ள விரும்புகிறேன் என்று தெரிவித்தார்.

முன்னதாக, காங்கிரஸ் கட்சியின் சொந்த தொகுதியாக கருதப்படும் அமேதி தொகுதியிலிருந்து அக்கட்சித் தலைவர் ராகுல், கடந்த 3 முறை மக்களவை உறுப்பினராக தேர்வு செய்யப்பட்டுள்ளார். இங்கு கடந்த முறை (2014) நடைபெற்ற மக்களவைத் தேர்தலில் காங்கிரஸ் தலைவர் ராகுல் 4,08,651 வாக்குகள் பெற்று வெற்றிபெற்றார். 

அவரை எதிர்த்து போட்டியிட்ட பாஜக வேட்பாளர் ஸ்மிருதி இராணி 3,00,748 வாக்குகள் பெற்றிருந்தது குறிப்பிடத்தக்கது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com