
தெலங்கானா மாநிலம், நாராயண பேட்டை மாவட்டத்தில் மண்சரிந்து விழுந்ததில், 10 பெண் கூலித் தொழிலாளர்கள் உயிரிழந்தனர்.
திலேர் என்ற கிராமத்தில், தேசிய ஊரக வேலை உறுதி திட்டத்தின் கீழ், கூலித்தொழிலாளர்கள் பணிபுரிந்து வந்தனர். இந்நிலையில் புதன்கிழமை காலை, பொக்லைன் மூலம் மண் எடுத்துக் கொண்டிருந்தபோது திடீரென மண்சரிந்து, அங்கு பணிபுரிந்து வந்த கூலி தொழிலாளர்கள் மீது விழுந்தது. இதில், சம்பவ இடத்திலேயே, 7 பேர் உயிரிழந்த நிலையில் மருத்துவமனைக்கு கொண்டு செல்லும் வழியில் மேலும் 3 பேர் உயிரிழந்தனர்.
உயிரிழந்தோரின் எண்ணிக்கை, 10 ஆக உயர்ந்துள்ளது. மேலும், பல தொழிலாளர்கள் காயம் அடைந்துள்ளதால், அவர்கள் மெகபூப் நகர் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்க்கப்பட்டுள்ளனர். காயமடைந்த தொழிலாளர்களில், பலர் நிலை கவலைக்கிடமாக உள்ளதால் பலி எண்ணிக்கை உயர்வதற்கான வாய்ப்பு இருப்பதாக, உடன் பணிபுரிந்த தொழிலாளர்கள் தெரிவித்தனர்.
முக்கிய செய்திகளை உடனுக்குடன் பெற... 'தினமணி'யின் வாட்ஸ்ஆப் செய்திச் சேவையில் இணைந்திருங்கள்...
தினமணி channel on WhatsApp: https://whatsapp.com/channel/0029Va60JxGFcowBIEtwvB0G