
பேஸ்புக் சமூக வலைதளத்தில் உலக தலைவர்களில் பிரதமர் மோடி தான் மிகவும் பிரபலமான தலைவர் என்று ஆய்வில் தகவல் வெளியாகியுள்ளது.
'பேஸ்புக்கில் உலக தலைவர்கள் - 2019' என்ற பெயரில் முன்னணி சர்வதேச நிறுவனம் ஒரு ஆய்வை நடத்தியுள்ளது.
அந்த ஆய்வில் கிடைத்த தகவலின்படி,
பிரதமர் மோடியின் பேஸ்புக் பக்கத்தை 4.35 கோடி பேர் லைக் செய்துள்ளனர். அவரது அலுவல் பக்கத்தை 1.37 கோடி பேர் லைக் செய்துள்ளனர். அவருக்கு அடுத்தபடியாக 2-ஆவது இடத்தில் அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப் உள்ளார். டிரம்ப் பேஸ்புக் பக்கத்தை 2.3 கோடி பேர் லைக் செய்துள்ளனர். 3-ஆவது இடத்தில் ஜோர்டன் ராணி ரானியா உள்ளார். அவரது பேஸ்புக் பக்கத்தை 1.69 கோடி பேர் லைக் செய்துள்ளனர்.
ஆனால், பேஸ்புக்கில் அதிக உரையாடல் கொண்ட தலைவராக பிரேசில் அதிபர் ஜேர் போல்சொனாரோ இருக்கிறார். அவருடைய பேஸ்புக் பக்கத்தில் 14.5 கோடி உரையாடல்கள் பதிவாகியுள்ளது. அவருக்கு அடுத்து 2-ஆவது இடத்தில் அமெரிக்க அதிபர் டிரம்ப் இருக்கிறார். அவரது பேஸ்புக் பக்கத்தில் 8.4 கோடி உரையாடல்கள் பதிவாகியுள்ளது.
ஆண்டுதோறும் உலக தலைவர்களின் பேஸ்புக் பக்கத்தை பின்பற்றுபவர்களின் எண்ணிக்கை 10 சதவீதம் அதிகரிக்கிறது. அதேசமயம் பேஸ்புக் பக்கங்களில் நிகழும் உரையாடல்களின் எண்ணிக்கை கணிசமாக குறைந்துள்ளது. 2016-ஆம் ஆண்டில் உலக தலைவர்களின் பேஸ்புக் பக்கங்களில் சுமார் 110 கோடி உரையாடல்கள் பதிவாகியுள்ளது. அதேசமயம், 2018-ஆம் ஆண்டில் அந்த எண்ணிக்கை 32.3 சதவீதம் குறைந்துள்ளது.
எது எப்படியோ, பேஸ்புக்கில் அதிகம் பின்பற்றப்படும் உலக தலைவர்களில் பிரதமர் மோடி முதலிடத்தில் உள்ளார்.