உங்களுடன் கூட்டணி அமைக்க யாரும் தயாராக இல்லை: மம்தா மீது அமித் ஷா விமர்சனம்

நீங்கள் கூறிக்கொண்டிருக்கும் மகா கூட்டணியில் உங்களுடன் இணைய எந்த கட்சியும் தயாராக இல்லை என மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி குறித்து அமித் ஷா விமர்சித்தார். 
உங்களுடன் கூட்டணி அமைக்க யாரும் தயாராக இல்லை: மம்தா மீது அமித் ஷா விமர்சனம்

நீங்கள் கூறிக்கொண்டிருக்கும் மகா கூட்டணியில் உங்களுடன் இணைய எந்த கட்சியும் தயாராக இல்லை என மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி குறித்து அமித் ஷா விமர்சித்தார். இதுதொடர்பாக வியாழக்கிழமை நடைபெற்ற தேர்தல் பிரசாரத்தில் அவர் மேலும் கூறியதாவது:

நாட்டிலுள்ள அனைத்து கட்சிகளுடனும் மகா கூட்டணி அமைப்பது குறித்து திரிணாமுல் காங்கிரஸ் தலைவரும், மேற்கு வங்க முதல்வருமான மம்தா பானர்ஜி தொடர்ந்து பேச்சுவார்த்தை நடத்தினார். ஆனால், அவருடன் கூட்டணி அமைக்க யாரும், எந்த அரசியல் கட்சியும் தயாராக இல்லை. 

காங்கிரஸ், கம்யூனிஸ்ட் என அனைத்து கட்சிகளும் உங்களை எதிர்க்கின்றன. அப்படி இருக்கும் போது அந்த கூட்டணியில் யார் தான் உள்ளார்? அதேபோன்று பிரிவினையை விரும்பும் ஒமர் அப்துல்லா உடன் கூட்டணி அமைக்க நீங்கள் தாயாரா? என்பதையும் தெளிபடுத்த வேண்டும். 

குடியுரிமை மசோதாவுக்கு மம்தா தற்போது எதிர்ப்பு தெரிவிக்கலாம். ஆனால், 2020-ல் மாநிலங்களவையிலும் பாஜக பலமுடன் இருக்கும். அப்போது இந்த மசோதா எளிதாக நிறைவேற்றப்படும். மேலும் வங்கதேசம், நேபால் என எங்கிருந்து வந்தாலும், ஹிந்து, சீக்கியர், கூர்கா என யாராக இருந்தாலும் அந்த மசோதா மூலம் நாட்டின் குடியுரிமை கிடைக்க நடவடிக்கை எடுக்கப்படும் என்பதை தெரிவித்துக்கொள்கிறேன். 

இந்தியாவிலிருந்து யாராலும் காஷ்மீரை பிரிக்க முடியாது என்பதை திட்டவட்டமாக தெரிவித்துக்கொள்கிறேன். மேலும் மேற்கு வங்கத்தில் அதிகப்பட்டியான பேர் ஊடுருவியுள்ளனர். மம்தாவும் வாக்கு வங்கி அரசியலுக்காக அவர்கள் மீது எந்த நடவடிக்கையும் எடுக்காமல் உள்ளார் என்று தெரிவித்தார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com