மாவோயிஸ்டுகளால் பெண் தேர்தல் அதிகாரி சுட்டுக்கொலை

ஒடிஷா மாநிலம் கந்தமால் மாவட்டத்தில் உள்ள பெண் தேர்தல் அதிகாரி சஞ்சுக்தா திகல் மாவோயிஸ்டுகளால் சுட்டுக் கொல்லப்பட்டார்.
கோப்புப்படம்
கோப்புப்படம்


ஒடிஷா மாநிலம் கந்தமால் மாவட்டத்தில் உள்ள பெண் தேர்தல் அதிகாரி சஞ்சுக்தா திகல் மாவோயிஸ்டுகளால் சுட்டுக் கொல்லப்பட்டார். 

ஒடிஷா மாநிலம் கந்தமால் மக்களவைத் தொகுதிக்கு நாளை (வியாழக்கிழமை) தேர்தல் நடைபெறவுள்ளது. இதற்கான வாக்குப்பதிவு காலை 7 மணிக்கு தொடங்குகிறது. இந்நிலையில், பெண் தேர்தல் அதிகாரி சஞ்சுக்தா திகல் இன்று மாவோயிஸ்டுகளால் சுட்டுக்கொல்லப்பட்டுள்ளார்.     

இதுகுறித்து, காவல்துறை தரப்பில் தெரிவிக்கப்பட்டதாவது:

சஞ்சுக்தா திகல் தேர்தல் அதிகாரிகளுடன் காரில் வாக்குச் சாவடிக்கு சென்று கொண்டிருந்தார். அப்போது, காட்டுப் பகுதியை கடந்து செல்லும் போது சாலையில் சந்தேகத்துக்குரிய பொருள் ஏதோ இருந்ததால், அவர் காரில் இருந்து இறங்கி அருகே சென்றுள்ளார். அப்போது, அவர் மாவோயிஸ்டுகளால் சுட்டுக்கொல்லப்பட்டார். எனினும், மற்ற அதிகாரிகள் காரிலேயே இருந்ததால், அவர்களுக்கு எந்தவித காயமும் ஏற்படவில்லை. இந்த சம்பவம் கந்தமால் மக்களவைத் தொகுதியின் கீழ் உள்ள புல்பானி சட்டப்பேரவைத் தொகுதிக்குட்பட்ட இடத்தில் நடைபெற்றுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com