சுடச்சுட

  

  மனைவி, குழந்தை இல்லாத மோடிக்கு குடும்பம் குறித்து எதுவும் தெரியாது: சரத் பவார்

  By DIN  |   Published on : 17th April 2019 05:00 PM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

  sharad-pawar

   

  மனைவி, குழந்தை இல்லாத மோடிக்கு குடும்பம் குறித்து எதுவும் தெரியாது என தேசியவாத காங்கிரஸ் தலைவர் சரத் பவார் தெரிவித்தார். இதுதொடர்பாக புதன்கிழமை நடைபெற்ற தேர்தல் பிரசாரத்தில் அவர் கூறியதாவது:

  நரேந்திர மோடிக்கு மனைவி, குழந்தை என யாரும் கிடையாது. அவருக்கென குடும்பம் கிடையாது. எனவே ஒரு குடும்பம் எவ்வாறு இருக்கும் என்று அவருக்கு புரிய வாய்ப்பில்லை. இதனால் தான் அவர் அடுத்தவர் குடும்பத்தில் மூக்கை நுழைக்கிறார். இது மிகவும் தவறான செயல் என்பதை அவருக்கு தெரியபடுத்திக்கொள்கிறேன். இதற்கு மேலும் என்னால் விமர்சிக்க முடியும். ஆனால், என்னை நான் தரம் தாழ்த்திக்கொள்ள விரும்பவில்லை.

  எனது குடும்பத்தினர் அனைவரும் பொறுப்புணர்வுடன் செயல்பட்டுக்கொண்டிருக்கின்றனர். எனது ஒரே மகளுக்கும் திருமணம் நடந்துவிட்டது. எனவே எனது குடும்பத்தில் என்ன நடக்கிறது என்பதெல்லாம் மோடிக்கு தேவையில்லாதது.

  நான் நல்லவன் எனவும், எனது குடும்பத்தில் ஒற்றுமை இல்லாததாலும் தான் இவ்வாறு செயல்படுவதாக மோடி என்னை விமர்சித்தார். அப்போது தான் எனக்கு ஒன்று புரிந்தது. எனக்கு மகள், மருமகன், மனைவி மற்றும் உறவினர்கள் என்று அனைவரும் உள்ளனர். ஆனால், மோடிக்கு யாரும் இல்லை என்பது என்று விமர்சித்தார்.

  முன்னதாக, தானும் ஒரு நாள் பிரதமராவோம் என்று சரத் பவார் நினைத்திருந்தார். மேலும் இந்த மக்களவைத் தேர்தலில் போட்டியிடுவதாகவும் அறிவித்தார். ஆனால், திடீரென மாநிலங்களவை போதும் என்று ஒதுங்கிக்கொண்டார்.

  ஏனென்றால், அவரது குடும்பத்தில் பெரும் பிரச்னை ஏற்பட்டுள்ளது. தேசியவாத காங்கிரஸ் கட்சியை துவக்க நடத்தி வந்தாலும், தற்போது அதன் முழுக்கட்டுப்பாடும் சரத் பவாரின் குடும்பத்தினரிடம் உள்ளது. இதனால் தான் கூட்டணி அமைப்பதிலும் சிக்கல் ஏற்பட்டுள்ளது என்று பிரதமர் நரேந்திர மோடி விமர்சித்திருந்தது குறிப்பிடத்தக்கது.

  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
  google_play app_store
  kattana sevai