
சூரத்: இளம்பெண்னை பாலியல் வன்கொடுமை செய்த வழக்கில், சாமியார் ஆசாராம் பாபுவின் மகன் நாராயண் சாய் குற்றவாளி என்று நீதிமன்றம் தீர்ப்பு அளித்துள்ளது.
தன்னைத்தானே கடவுள் என்று அறிவித்துக் கொண்டவரான சாமியார் ஆசாராம் பாலியல் வழக்குக்களில் சிக்கி சர்ச்சைக்குள்ளானவர்.
இந்நிலையில் இளம்பெண்னை பாலியல் வன்கொடுமை செய்த வழக்கில், சாமியார் ஆசாராம் பாபுவின் மகன் நாராயண் சாய் குற்றவாளி என்று நீதிமன்றம் தீர்ப்பு அளித்துள்ளது.
சூரத்தில் அமைந்துள்ள சாமியாரின் ஆசிரமத்தில் அந்த இளம்பெண் 2002-ஆம் ஆண்டு முதல் 2005-ஆம் ஆண்டு வரை சிஷ்யையாக தங்கி இருந்தார். அப்போது சாமியாரின் மகனான நாராயண் சாய் தனக்குத் தொடந்து பாலியல் தொந்தரவு கொடுத்ததாக அப்பெண் 2013-ஆம் ஆண்டு காவல்துறையில் புகார் கொடுத்தார்.
அதைத் தொடந்து விசாரணையின் முடிவில் ஹரியாணாவின் பிப்லியிலிருந்து நாராயண் சாய் கைது செய்ப்பட்டார்.
போலீசார் தொடந்த வழக்கானது சூரத்தில் உள்ள அமர்வு நீதிமன்றத்தில் நடந்து வந்தது. அந்த வழக்கில்தான் நீதிமன்றம் வெள்ளியன்று நாராயண் சாய் குற்றவாளி என்று தீர்ப்பு அளித்துள்ளது.
அவருக்கான தண்டனை விபரங்கள் ஏப்ரல் 30-ஆம் தேதி வெளியிடப்படும் என்று நீதிமன்றம் தெரிவித்துள்ளது.
கடந்த 5 ஆண்டுகளுக்கு முன்பு, ராஜஸ்தானில் உள்ள தனது ஆசிரமத்தில் தங்கியிருந்த சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்ததாக தொடரப்பட்ட வழக்கில், சாமியார் ஆசாரம் ஆயுள் தண்டனை பெற்று சிறையில் உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.