சந்திரயான்-2 திட்டம் ஒத்திவைப்பு:இஸ்ரோ

சந்திரயான் 2 திட்டத்தை ஜூலை மாதத்துக்கு ஒத்தி வைத்திருப்பதாக இஸ்ரோ தெரிவித்துள்ளது.
சந்திரயான்-2 திட்டம் ஒத்திவைப்பு:இஸ்ரோ

சந்திரயான் 2 திட்டத்தை ஜூலை மாதத்துக்கு ஒத்தி வைத்திருப்பதாக இஸ்ரோ தெரிவித்துள்ளது.
நிலவு தொடர்பான ஆராய்ச்சிக்கு சந்திரயான்-1 விண்கலத்தை இந்தியா செலுத்தியது. இதைத் தொடர்ந்து, நிலவில் ஆராய்ச்சி செய்வதற்கு சந்திரயான் -2 விண்கலத்தை இம்மாதம் செலுத்த இந்தியா முடிவு செய்திருந்தது.
இதனிடையே, நிலவு தொடர்பான ஆராய்ச்சிக்கு இஸ்ரேல் அனுப்பிய பெர்ஷித் விண்கலம் இம்மாதம் வெடித்து சிதறியது. இதன்மூலம் இஸ்ரேலின் நிலவு தொடர்பான ஆராய்ச்சித் திட்டம் தோல்வியில் முடிவடைந்தது.
இதன் எதிரொலியாக, சந்திரயான்-2 விண்கலத்தை நிலவுக்கு அனுப்பும் திட்டத்தை இஸ்ரோ ஜூலை மாதத்துக்கு ஒத்திவைத்துள்ளது.
இதுகுறித்து இஸ்ரோ மூத்த அதிகாரி ஒருவர் கூறுகையில், "நிலவில் விண்கலத்தை தரையிறக்குவது மிகவும் சிக்கலான திட்டமாகும். இந்தத் திட்டத்தில் அனைத்து அம்சங்களையும் கவனத்தில் கொள்ள வேண்டியுள்ளது. 
விண்வெளிக்கு சந்திரயான்-2 விண்கலத்தை அனுப்புவதற்கு, அடுத்து ஜூலை மாதம் மத்தியில் 10 நாள்கள் உள்ளது. ஆதனால் சந்திரயான்-2 விண்கலம் திட்டத்தை ஜூலை மாதத்துக்கு ஒத்தி வைத்துள்ளோம்.
சந்திரயான்-2 திட்டத்தில் பிரச்னை நேரிடுவதை இஸ்ரோ விரும்பவில்லை. தொழில்நுட்ப ரீதியில் அதிகம் மேம்பட்ட இஸ்ரேலின் விண்கலம் தோல்வியடைந்து விட்டது. ஆனால் நமது திட்டம் வெற்றியடைய வேண்டும் என விரும்புகிறோம். இதனாலேயே சந்திரயான்-2 திட்டத்தை ஒத்திவைக்கும் முடிவை எடுத்துள்ளோம் என்றார் அவர்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com