ரெட் கார்னர் நோட்டீஸ் பிறப்பிக்க இண்டர்போலுக்கு மத்திய அரசு அழுத்தம்

"எனக்கு எதிராக ரெட் கார்னர் நோட்டீஸ் பிறப்பிக்குமாறு இண்டர்போல் அமைப்புக்கு (சர்வதேச காவல் துறை) இந்திய அரசு தொடர்ந்து அழுத்தம் கொடுத்து வருகிறது' என்று சர்ச்சைக்குரிய மத போதகர் ஜாகிர் நாயக்
ரெட் கார்னர் நோட்டீஸ் பிறப்பிக்க இண்டர்போலுக்கு மத்திய அரசு அழுத்தம்

"எனக்கு எதிராக ரெட் கார்னர் நோட்டீஸ் பிறப்பிக்குமாறு இண்டர்போல் அமைப்புக்கு (சர்வதேச காவல் துறை) இந்திய அரசு தொடர்ந்து அழுத்தம் கொடுத்து வருகிறது' என்று சர்ச்சைக்குரிய மத போதகர் ஜாகிர் நாயக் கூறியுள்ளார். 
இதுதொடர்பாக, மும்பையில் அவர் சார்பாக வியாழக்கிழமை வெளியிடப்பட்ட அறிக்கையில் கூறப்பட்டிருப்பதாவது: 
என் மீதான குற்றச்சாட்டில் இண்டர்போல் அமைப்பிடம் மத்திய அரசு ஒன்றரை ஆண்டுகளுக்கு முன் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்தது. அப்போதிருந்து, எனக்கு எதிராக ரெட் கார்னர் நோட்டீஸ் பிறப்பிக்குமாறு அந்த அமைப்புக்கு மத்திய அரசு அழுத்தம் கொடுத்து வருகிறது. ஏற்கெனவே எனக்கு எதிரான ரெட் கார்னர் நோட்டீûஸ இண்டர்போல் அமைப்பு ரத்து செய்து விட்டது. என்னை இந்தியாவுக்கு நாடு கடத்தி, எனக்கு தண்டனை பெற்றுத் தருவதற்கு மத்திய அரசு மேற்கொள்ளும் முயற்சிகளில் இதுவும் ஒன்று என்று அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
வங்கதேசத்தில் கடந்த 2016-ஆம் ஆண்டு நிகழ்த்தப்பட்ட பயங்கரவாதத் தாக்குதலில் 22 பேர் உயிரிழந்தனர். ஜாகிர் நாயக்கின் தொலைக்காட்சி உரையின் தாக்கத்தால், பயங்கரவாதிகள் இந்த தாக்குதலை நிகழ்த்தியதாகக் கூறப்படுகிறது. இதையடுத்து, ஜாகிர் நாயக் மீதும், அவரது இஸ்லாமிய ஆராய்ச்சி அறக்கட்டளை மீதும் தேசியப் புலனாய்வு அமைப்பும், அமலாக்கத் துறையும் தனித்தனியே வழக்குகள் பதிவு செய்தன.
அவர் மீது, இரு சமூகத்தினரிடையே பகை ஏற்படும் வகையில் உரையாற்றுதல், இளைஞர்கள் மத்தியில் பயங்கரவாதத்தை தூண்டுதல் ஆகிய குற்றச்சாட்டுகள் முன்வைக்கப்பட்டன. அவருடைய இஸ்லாமிய ஆராய்ச்சி அறக்கட்டளைக்கு 5 ஆண்டுகளுக்கு மத்திய அரசு தடை விதித்தது.
இதனிடையே, மலேசியாவில் தங்கியுள்ள ஜாகிர் நாயக், இந்தியாவுக்கு திரும்பி வர மறுத்துள்ளார். அவரைத் தேடப்படும் குற்றவாளியாக என்ஐஏ சிறப்பு நீதிமன்றம் கடந்த 2017-ஆம் ஆண்டு ஜூன் மாதம் அறிவித்தது. மேலும், அவருக்கு எதிராக, அதே ஆண்டு அக்டோபர் மாதம்  குற்றப்பத்திரிகையை தேசியப் புலனாய்வு அமைப்பு தாக்கல் செய்தது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com