Enable Javscript for better performance
Actor Kangana Ranaut after voting, India is gaining independence in real sense today- Dinamani

சுடச்சுட

    

    இத்தாலிய அரசிடம் இருந்து இப்போதுதான் சுதந்திரம் கிடைத்துள்ளது: கங்கனா ரணாவத்

    By DIN  |   Published on : 30th April 2019 10:59 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    Kangana_Ranaut

     

    மக்களவைக்கு 4-ஆவது கட்டமாக, மகாராஷ்டிரம், உத்தரப் பிரதேசம், ராஜஸ்தான், மேற்கு வங்கம் உள்பட 9 மாநிலங்களில் உள்ள 72 தொகுதிகளில் திங்கள்கிழமை வாக்குப்பதிவு நடைபெற்றது. இதில், மொத்தம் 64 சதவீத வாக்குகள் பதிவாகின.

    மும்பையில் வாக்களித்த பாலிவுட் பிரபலங்கள்:

    நடிகர் அமிதாப் பச்சன், தனது மனைவி ஜெயா பச்சன், மகன் அபிஷேக், மருமகள் ஐஸ்வர்யாவுடன் வந்து வாக்களித்தார். நடிகர்கள் ஷாரூக் கான், சல்மான்கான், ஆமிர் கான், ஹிருத்திக் ரோஷன், வருண் தவான், சஞ்சய் தத், நடிகைகள் ரேகா, மாதுரி தீட்சித், பிரியங்கா சோப்ரா, பிரீத்தி ஜிந்தா, தீபிகா படுகோன், கங்கனா ரணாவத் உள்ளிட்டோரும் ஜனநாயக கடமையை நிறைவேற்றினர்.  

    இந்நிலையில், இத்தாலிய அரசிடம் இருந்து இப்போதுதான் விடுதலை கிடைத்துள்ளது என்று பிரபல பாலிவுட் நடிகை கங்கனா ரணாவத் தெரிவித்தார். இதுதொடர்பாக வாக்களித்த பின்னர் செய்தியாளர்களிடம் அவர் கூறியதாவது:

    இத்தனை நாட்களாக நம் நாடு முகலாயர்கள், ஆங்கிலேயர்கள் மற்றும் இத்தாலியர்களிடம் அடிமைப்பட்டிருந்தது. இப்போதுதான் நம் நாட்டுக்கு சுதந்திரம் கிடைத்திருப்பதை நான் உணர்கிறேன். எனவே உங்கள் சுதந்திரத்தை காக்க வாக்களியுங்கள் என்றார். 

     

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம்
      பகிரப்பட்டவை
    google_play app_store
    kattana sevai