நீட் விவகாரத்தில் உறுதிமொழி அளிக்க பாஜக மறுப்பு: மாநிலங்களவையில் அதிமுக வெளிநடப்பு 

நீட் விவகாரத்தில் விலக்கு அளிக்கப்படும் என்று உறுதிமொழி அளிக்க பாஜக மறுப்பு தெரிவித்த காரணத்தால், மாநிலங்களவையில் இருந்து அதிமுக வெளிநடப்பு செய்துள்ளது.
நீட் விவகாரத்தில் உறுதிமொழி அளிக்க பாஜக மறுப்பு: மாநிலங்களவையில் அதிமுக வெளிநடப்பு 

புது தில்லி: நீட் விவகாரத்தில் விலக்கு அளிக்கப்படும் என்று உறுதிமொழி அளிக்க பாஜக மறுப்பு தெரிவித்த காரணத்தால், மாநிலங்களவையில் இருந்து அதிமுக வெளிநடப்பு செய்துள்ளது.

மக்களவையில் கடந்த திங்களன்று அறிமுகப்படுத்தி நிறைவேற்றப்பட்ட தேசிய மருத்துவ ஆணைய மசோதாவானது, மாநிலங்களவையில் புதனன்று அறிமுகப்படுத்தப்பட்டது.  அதன் மீதான விவாதமானது வியாழனன்று நடைபெற்றது.

அப்போது அதிமுக சார்பாக பேசிய எம்.பிக்கள் நவநீதகிருஷ்ணன் மற்றும் விஜிலா சத்யானந்த் ஆகிய இருவரும் பேசும்போது, நீட் தேர்வில் இருந்து தமிழகத்திற்கு விலக்கு அளிக்கப்படும் என்று மத்திய அமைச்சர் வாக்குறுதி அளிக்க வேண்டும் என்றும், தற்போதைய தேசிய மருத்துவ ஆணைய மசோதாவில் அறிமுகப்படுத்தப்பட உள்ள 'எக்சிட்' தேர்வையும் ரத்து செய்ய வேண்டும் என்று வலியுறுத்தினார்.

ஆனால் அவ்வாறு வாக்குறுதி எதுவும் மத்திய அமைச்சர் ஹர்ஷவர்தன் அளிக்கவில்லை. இதனைச் சுட்டிக்காட்டி அதிமுக எம்.பிக்கள் மாநிலங்களவையிலிருந்து வெளிநடப்பு செய்தனர்.

மசோதா மீது வாக்கெடுப்பு நடைபெற இருந்த வேளையில் நடந்திருக்கும் இந்த வெளிநடப்பானது மறைமுகமாக பாஜகவுக்கு ஆதரவான நிலைப்பாடாகவே பார்க்கப்படுகிறது.    

முத்தலாக் மசோதா மீதும் இதே மாதிரியான நடைமுறையைத்தான் அதிமுக செயல்படுத்தியது என்பது குறிப்பிடத்தக்கது.   

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com