இந்திய பொருளாதார மந்தநிலை மிகவும் கவலையளிக்கிறது: முன்னாள் ரிசர்வ் வங்கி ஆளுநர் ரகுராம் ராஜன்

பொதுவாகவே தொழில்கள் கவலையளிப்பதாக உள்ளது என பலர் கூறிவருவதை இப்போது நம்மால் கேட்க முடிகிறது. இதற்கு ஏதோ ஒரு ஊக்குவிப்பு தேவை 
இந்திய பொருளாதார மந்தநிலை மிகவும் கவலையளிக்கிறது: முன்னாள் ரிசர்வ் வங்கி ஆளுநர் ரகுராம் ராஜன்

   
புதுதில்லி: இந்திய பொருளாதார மந்தநிலை மிகவும் கவலை அளிக்கிறது. இப்பிரச்னைகளை சரிசெய்ய தனியார் முதலீடுகளை அதிகரிக்கும் வகையில் மின்சாரம் மற்றும் வங்கி சாரா நிதித் துறைகளில் பிரச்சனைகளை உடனடியாக சரி செய்ய வேண்டும். மேலும் தனியார் துறை முதலீடுகளை கொண்டுவருவதற்கான புதிய சீர்திருத்தங்களை மத்திய அரசு கொண்டு வரவேண்டும் என்று ரிசவ் வங்கியின் முன்னாள் ஆளுநர் ரகுராம் ராஜன் யோசனை தெரிவித்துள்ளார்.

ரகுராம் ராஜன், ஒரு தனியார் செய்தி நிறுவனம் ஒன்றுக்கு அளித்த பேட்டியில், இந்தியாவின் பொருளாதார மந்தநிலை மிகவும் கவலை அளிக்கிறது. 2018-19 ஆம் ஆண்டில் பொருளாதார வளர்ச்சி விகிதம் 6.8 சதவீதமாக குறைந்து விட்டது. கடந்த 2014-15 ஆம் ஆண்டில் இருந்து இதுதான் குறைந்த அளவாகும். தனியார் வல்லுநர்கள் மற்றும் ரிசர்வ் வங்கியின் பல்வேறு கணிப்புகளின் படி நடப்பு ஆண்டில் மொத்த உள்நாட்டு உற்பத்தியின் வளர்ச்சி 7 சதவீதத்துக்கும் குறைவாகவே இருக்கும் என்று கணித்துள்ளது.

ஆட்டோமொபைல், ரியல் எஸ்டேட், நுகர்வோர் உற்பத்தி நிறுவனங்கள் என எல்லாவற்றிலும் வீழ்ச்சி காணப்படுகிறது. ஆயிரக்கணக்கானோர் வேலையில் இருந்து விடுவிக்கும் பரிந்துரை அறிக்கைகளுடன் வாகனத் துறை அதன் மோசமான நெருக்கடியை எதிர்கொள்கிறது. ரியல் எஸ்டேட் துறையில் மிகப்பெரிய அளவில் விற்பனைகள் தேக்கத்தில் உள்ளன, அதே நேரத்தில் வேகமாக நகரும் நுகர்வோர் பொருட்கள் ( எஃப்.எம்.சி.ஜி) நிறுவனங்களும் வளர்ச்சியில் சரிவைக் கண்டுள்ளன. 

பொதுவாகவே தொழில்கள் கவலையளிப்பதாக உள்ளது என பலர் கூறிவருவதை இப்போது நம்மால் கேட்க முடிகிறது. இதற்கு ஏதோ ஒரு ஊக்குவிப்பு தேவை என தொழிலதிபர்கள் கூறுகின்றனர். பொருளாதாரம் மற்றும் வளர்ச்சி வீதத்தை அதிகரிக்க நமக்கு புதிய சீர்திருத்தங்கள் கொண்டுவரப்பட வேண்டும். சர்வதேச நிதி நிறுவனங்களிடம் கடன் வாங்குவது சீர்திருத்தம் அல்ல, அது ஒரு தந்திரமான யுக்தி நடவடிக்கை. 

நாட்டின் வளர்ச்சி வீகிதத்தை 2 அல்லது 3 புள்ளிகள் அதிகரிக்க, நாட்டை எவ்வாறு கொண்டு செல்ல வேண்டும என்ற புரிதல்தான் நமக்கு இப்போதைய தேவையாக உள்ளது. மின்துறை மற்றும் வங்கி சாரா நிதி நிறுவனங்களிள் நிலவும் பிரச்னைகளை விரைந்து சரி செய்யப்பட வேண்டும். தனியார் துறை முதலீடுகளை அதிகரிப்பதற்கான புதிய சீர்திருத்த நடவடிக்கைகளை கொண்டு வர வேண்டும். 

தற்போதுள்ள நிதி நெருக்கடியில் சலுகைகள், ஏதோ ஒருவிதமான ஊக்குவிப்பு போன்றவை. அவை நீண்ட காலத்துக்கு பயனளிக்காது. 

இந்திய சந்தைகள், இந்தி தொழில்கள், நாட்டு மக்களை ஊக்குவிக்கும் வகையில் நன்கு சிந்தித்து எடுக்கப்படும் சீர்திருத்தங்கள்தான் நமக்கு இப்போதைய தேவையாக உள்ளது. 

ஜிடிபி வளர்ச்சி குறித்து முன்னாள் தலைமை பொருளாத ஆலோசகர் அரவிந்த் சுப்பிரமணியன் கூறிய சில விவாதங்கள் மீது நாம் கவனம் செலுத்த வேண்டும். சில ஜிடிபி புள்ளிவிவரங்களை வைத்துக்கொண்டு நாம் வளர்ச்சி வீகிதத்தை மிகை மதிப்பீடு செய்யலாம்.  ஆனால் ஜிடிபி கணக்கிடும் முறையை நாம் தனியான நிபுணர் குழு மூலம் ஆய்வு செய்ய வேண்டும். ஜிடி எண்கள் தவறான் கொள்கை திட்டங்கள் வகுக்க காரணமாக இருந்துவிடக் கூடாது என்பதை நாம் கவனத்தில் கொள்ள வேண்டும். 

மின்சார துறை, வங்கிசாரா நிதி நிறுவனங்கள் ஆகியவற்றில் பிரச்னைகளை உடனடியாக களையப்பட வேண்டும். தனியார் துறையினர் முதலீடு செய்வதை தூண்டும் வகையில் சீர்திருத்தங்கள் கொண்டுவரப்பட வேண்டும். தற்போதுள்ள கடினமான சூழ்நிலையில், ஊக்கச்சலுகைகள் நீண்டகால பலன் அளிக்காது.

முன்னாள் தலைமை பொருளாதார ஆலோசகர் அரவிந்த் சுப்பிரமணியன் கூறியதுபோல், நாம் நமது மொத்த உள்நாட்டு உற்பத்தி விகிதத்தை அதிகமாக மதிப்பிட்டு விட்டோம். சரியான கண்ணோட்டத்துடன் அதை மதிப்பிட வேண்டும்.

கடந்த 2008 ஆம் ஆண்டு நிவவிய சர்வதேச நிதி நெருக்கடியை ஒப்பிடுகையில், உலக முழுவதும் வங்கிகள் தற்போது மோசமான நிலையில் இல்லை. நிதித்துறைகளில் தற்போது பெரியவில் பிரச்னை இல்லை. அதில் போதிய கவனம் செலுத்தவில்லை என்றால், உலக நாடுகள் தங்கள் சொந்த நலனுக்காக சில நடவடிக்கைகளை எடுக்கலாம். இது வித்தியசாமன உலகம்.

2008-ஆம் ஆண்டை போன்ற சர்வதேச பெரிய பொருளாதார வீழ்ச்சி, மீண்டும் ஏற்படாது என்று என்னால் கணிக்க முடியாது. ஆனால், அப்படி ஏற்பட்டால், அது வேறு காரணங்களால்தான் ஏற்படும். தற்போதைய பிரச்னைகளை களைந்தாலும், புதிய பிரச்னைகள் வருவதை தடுக்க முடியாது என்று கூறினார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com