
ஜம்மு-காஷ்மீர் மாநிலம், பாராமுல்லா மாவட்டத்தில் பயங்கரவாதி ஒருவரை போலீஸார் கைது செய்தனர்.
இதுகுறித்து ராணுவ அதிகாரி ஒருவர் கூறுகையில், பாராமுல்லா மாவட்டத்தின் தெலினா என்ற கிராமத்தில் கடந்த திங்கள்கிழமை இரவு 10.15 மணிக்கு பயங்கரவாதி ஒருவர் பாதுகாப்புச் சாவடி மீது துப்பாக்கியால் சுட்டார்.
இதையடுத்து அவரை ராணுவ வீரர்களும், போலீஸாரும் சுற்றி வளைத்து துப்பாக்கி முனையில் கைது செய்தனர். அந்த பயங்கரவாதியிடம் இருந்து ஏகே 47 ரக துப்பாக்கியும், கைத்துப்பாக்கியும் கைப்பற்றப்பட்டன என்றார்.