நாட்டின் பொருளாதார வளர்ச்சி ஏப்ரல் முதல் ஜூன் வரையிலான காலாண்டில் 5% ஆக சரிவு

நாட்டின் பொருளாதார வளர்ச்சி கடந்த ஏப்ரல் முதல் ஜூன் வரையிலான காலாண்டில் 5% ஆக சரிவடைந்துள்ளது. பொருளாதார வளர்ச்சி கடந்த 5 ஆண்டுகளில் இல்லாத அளவுக்குக் குறைந்துள்ளது.
நாட்டின் பொருளாதார வளர்ச்சி ஏப்ரல் முதல் ஜூன் வரையிலான காலாண்டில் 5% ஆக சரிவு


புது தில்லி: நாட்டின் பொருளாதார வளர்ச்சி கடந்த ஏப்ரல் முதல் ஜூன் வரையிலான காலாண்டில் 5% ஆக சரிவடைந்துள்ளது. பொருளாதார வளர்ச்சி கடந்த 5 ஆண்டுகளில் இல்லாத அளவுக்குக் குறைந்துள்ளது.

நாட்டின் பொருளாதார வளர்ச்சி விகிதம் கடந்த ஜனவரி முதல் மார்ச் மாதம் வரையிலான காலகட்டத்தில் 5.8 சதவீதமாக சரிந்திருந்தநிலையில், ஏப்ரல் - ஜூன் வரையிலான காலாண்டில் 5% ஆக  மேலும் சரிந்துள்ளது.

கடந்த 5 ஆண்டுகளில் இதுமிகவும் மோசமான சரிவாகும். 

நாட்டின் பொருளாதார வளர்ச்சியில் ஏற்ற இறக்கம் ஏற்படுவது இயல்பானதுதான் என்று ரிசர்வ் வங்கி ஏற்கனவே தெரிவித்திருந்தது. தனியார் முதலீடுகளை அதிகரிப்பதன் மூலம் பொருளாதார மந்தநிலையில் இருந்து மீளலாம் என்று அந்த வங்கி ஆலோசனை தெரிவித்துள்ளது குறிப்பிடத்தக்கது.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com