ஆசிரியர்களின் வருகையைப் பதிவு செய்ய 'செல்பி' - நடைமுறைக்கு வருமா?

உத்தரப்பிரதேச மாநிலத்தில் மொபைல் செயலியில் செல்பி எடுத்து ஆசிரியர்கள் தங்களது வருகையைப் பதிவு செய்ய வேண்டும் என்ற விதிமுறையை  அம்மாநில மாநில அரசு கொண்டு வரவுள்ளது. 
ஆசிரியர்களின் வருகையைப் பதிவு செய்ய 'செல்பி' - நடைமுறைக்கு வருமா?

உத்தரப்பிரதேச மாநிலத்தில் மொபைல் செயலியில் செல்பி எடுத்து ஆசிரியர்கள் தங்களது வருகையைப் பதிவு செய்ய வேண்டும் என்ற விதிமுறையை  அம்மாநில மாநில அரசு கொண்டு வரவுள்ளது. ஆனால், இந்த விதிமுறைக்கு பெண் ஆசிரியர்கள் தங்களது எதிர்ப்பைப் பதிவு செய்துள்ளனர்.  

உத்தரப்பிரதேச மாநிலத்தில் அரசுப்பள்ளி ஆசிரியர்களின் வருகையை உறுதி செய்யும் பொருட்டு , அம்மாநில அரசு ஒரு புதிய விதிமுறையை கொண்டுவரவுள்ளது. அதன்படி, மாநிலத்தில் உள்ள தொடக்கப்பள்ளி ஆசிரியர்கள் அனைவரும் பள்ளியில் உள்ள மாணவர்களுடன், நாள் ஒன்றுக்கு மூன்று முறை செல்பி எடுத்து, 'பிரேர்னா' என்ற மொபைல் செயலி மூலமாக சம்மந்தப்பட்ட அதிகாரிகளுக்கு அனுப்ப வேண்டும். 

சரியாக காலை 8 மணிக்கு பள்ளிக்கு வந்ததுடன், குறிப்பிட்ட நேரத்தில் செல்பி எடுத்து அனுப்ப வேண்டும். அவ்வாறு அனுப்பாத பட்சத்தில் ஆசிரியர்களுக்கு அன்றைய தினம் ஊதியம் வழங்கப்படமாட்டாது என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. ஏற்கனவே உ.பியில் பராபங்கி என்ற மாவட்டத்தில் உள்ள பள்ளியில் இது சோதனைக்கு உட்படுத்தப்பட்டுள்ளது. 

வருகிற செப்டம்பர் 5ம் தேதி ஆசிரியர் தினம் கொண்டாடப்படுவதையொட்டி, அதற்கு முந்தைய நாளான செப்டம்பர் 4ம் தேதி இந்த விதிமுறை மாநிலம் முழுவதும் கொண்டுவரப்படுவதாக முதல்வர் யோகி ஆதித்யநாத் அறிவித்துள்ளார். 

ஆனால், ஆசிரியர்கள் இதற்கு தொடர்ந்து எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர். 'பெண் ஆசிரியர்கள் மொபைல் செயலி மூலமாக புகைப்படம் எடுத்து அனுப்பும் போது அது தவறாக பயன்படுத்தப்பட வாய்ப்புள்ளது. இது, அவர்களின் வாழ்க்கையை பாதிக்கும். அவர்களின் அடிப்படை உரிமையை மீறுவதாகும். அவர்களது  புகைப்படங்கள் தவறாகப் பயன்படுத்தப்பட்டால் யார் பொறுப்பை ஏற்றுக்கொள்வார்கள்?' பெண்கள் சங்கத்தின் மாநிலத் தலைவர் சுஷில் குமார் பாண்டே கேள்வி எழுப்பியுள்ளார். மாநில அரசின் இந்த முடிவுக்கு ஆசிரியர்களும் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர். 

ஆசிரியர்களின் இந்த எதிர்ப்பு குறித்து உ.பி மாநில அதிகாரிகள் ஆலோசனை மேற்கொண்டு வருகின்றனர். இதனால், இந்த விதிமுறை அமலுக்கு வருமா? என்பது கேள்விக்குறியாகியுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com