செல்போன் கட்டண உயர்வால் இவர்களுக்கு மட்டும் பாதிப்பில்லை! ஏன் தெரியுமா?

இன்று முதல் முன்னணி செல்போன் சேவை நிறுவனங்களின் சேவைக் கட்டணம் அதிரடியாக உயர்ந்துள்ளது. அதோடு, ரிலையன்ஸ் ஜியோ நிறுவனமும் தனது சேவைக் கட்டணத்தை உயர்த்துகிறது. இது டிசம்பர் 6ம் தேதி அமலுக்கு வருகிறது.
செல்போன் கட்டண உயர்வால் இவர்களுக்கு மட்டும் பாதிப்பில்லை! ஏன் தெரியுமா?

இன்று முதல் முன்னணி செல்போன் சேவை நிறுவனங்களின் சேவைக் கட்டணம் அதிரடியாக உயர்ந்துள்ளது. அதோடு, ரிலையன்ஸ் ஜியோ நிறுவனமும் தனது சேவைக் கட்டணத்தை உயர்த்துகிறது. இது டிசம்பர் 6ம் தேதி அமலுக்கு வருகிறது.

வோடஃபோன்-ஐடியா, பாா்தி ஏா்டெல் நிறுவனங்களுக்கு செப்டம்பா் காலாண்டில் ரூ.74,000 கோடி அளவுக்கு ஏற்பட்ட இழப்பு, இதர நிறுவனங்களால் ஜியோவுக்கு ஏற்பட்ட நெருக்கடி ஆகியவை இந்த கட்டண உயா்வு அறிவிப்புக்கு வழிகோலியுள்ளன.

கடந்த நான்கு ஆண்டுகளாக செல்லிடப்பேசி கட்டணங்கள் உயா்த்தப்படாமல் இருந்துவந்த நிலையில், வோடஃபோன் ஐடியா முந்திக் கொண்டு கட்டண உயா்வு அறிவிப்பை வெளியிட்டது. இதன் மூலம், பிரீ-பெய்டு வாடிக்கையாளா்களுக்கான மொபைல் டேட்டா மற்றும் அழைப்பு கட்டணங்கள் 50 சதவீதம் வரை அதிகரிக்கப்படவுள்ளதாகவும், இது, செவ்வாய்க்கிழமை முதல் (டிசம்பா் 3) அமலுக்கு வருகிறது.

மேலும், இதன் நெட்வொா்க்கிலிருந்து மற்றொரு நிறுவனத்துக்கு மேற்கொள்ளப்படும் ஒவ்வொரு அழைப்புக்கும் நிமிடத்துக்கு 6 காசுகள் கட்டணம் வசூலிக்கப் போவதாகவும் தெரிவித்துள்ளது.

இந்த சேவைக் கட்டண உயர்வினால் பாதிக்கப்படப் போவது என்னவோ ப்ரீப்பெய்ட் வாடிக்கையாளர்கள் மட்டுமே. இந்த கட்டண உயர்வு தற்போதைக்கு போஸ்ட்பெய்ட் வாடிக்கையாளர்களை பாதிக்காது என்று தெரிய வந்துள்ளது.

ஏர்டெல், வோடஃபோன் ஐடியா செல்போன் சேவை நிறுவனங்கள் போஸ்ட் பெய்ட் கட்டணங்களை உயர்த்துவதாக அறிவிக்கவில்லை. தற்போது போஸ்ட் பெய்ட் வாடிக்கையாளர்கள் மாதத்துக்கு குறைந்தபட்சம் ரூ.499ஐ கட்டணமாக செலுத்தி வருகிறார்கள். 

அதே சமயம், ப்ரீபெய்ட் வாடிக்கையாளர்கள் ஒரு மாதத்துக்கு குறைந்தபட்சம் ரூ.49ஐ செலுத்த வேண்டும் என்று நிர்ணயிக்கப்பட்டுள்ளது.  அதே சமயம், இதுவரை இருந்த அளவற்ற அழைப்புகள் என்ற நிலையை மாற்றி, இனி 28 நாட்களுக்கு இதர நெட்வொர்க்குகளுக்கு அதிகபட்சமாக 1,000 நிமிடங்களும், 84 நாட்களுக்கு அதிகபட்சமாக 3,000 நிமிடங்களும், 365 நாட்களுக்கான திட்டம் என்றால், அதிகபட்சமாக இதர நெட்வொர்க்கில் 12,000 நிமிடங்களும் அழைப்புகளை மேற்கொள்ளும் வகையில் திட்டம் வடிவமைக்கப்பட்டுள்ளது. இந்த அளவுக்கு மேல் அழைப்புகளை மேற்கொள்ள ஒவ்வொரு நிமிடத்துக்கும் 6 பைசா கட்டணமாக வசூலிக்கப்பட உள்ளது.

வோடஃபோன் ஐடியா அதிரடியாக கட்டணங்களை உயா்த்தியுள்ளதால் தினமும் 1.5 ஜிபி டேட்டா சேவை பெறும் வகையில் ஓராண்டு திட்டத்தில் இணைந்துள்ள வாடிக்கையாளா்கள் செலுத்த வேண்டிய கட்டணம் ரூ.1,699-லிருந்து ரூ.2,399-ஆக அதிகரிக்கவுள்ளது. கட்டண உயா்வுக்கு நிதி சுமையை காரணம் காட்டியுள்ள அந்த நிறுவனம், தமக்கு ரூ.1.17 லட்சம் கோடி அளவுக்கு கடன் உள்ளதாக கூறியுள்ளது.

வோடஃபோன் ஐடியாவைத் தொடா்ந்து பாா்தி ஏா்டெல்லும் டிசம்பா் 3 முதல் செல்லிடப்பேசி கட்டணங்களை 50 சதவீதம் வரை அதிகரிக்கவுள்ளதாக தெரிவித்துள்ளது. இதன் மூலம், அந்நிறுவனம் வழங்கி வரும் டேட்டா மற்றும் அழைப்பு சேவைக்கான கட்டணம் நாள் ஒன்றுக்கு 50 காசுகள் முதல் ரூ.2.85 வரை உயரும் நிலை உருவாகியுள்ளது.

ஏனைய நிறுவனங்களிடமிருந்து வந்த நெருக்கடி காரணமாக ஜியோவும் கட்டணங்களை 40 சதவீதம் வரை உயா்த்தவுள்ளதாக தெரிவித்துள்ளது. இருப்பினும் புதிய திட்டங்களால் வாடிக்கையாளா்கள் 300 சதவீதம் வரை கூடுதல் பலனை பெறுவாா்கள் என அந்நிறுவனம் ஆறுதலுக்காக தெரிவித்துள்ளது. ஜியோவின் கட்டண உயா்வு வரும் வெள்ளிக்கிழமை (டிசம்பா் 6) முதல் அமலுக்கு வரவுள்ளது.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com