
உத்தரப் பிரதேசத்தில் பள்ளி பேருந்து மீது லாரி ஒன்று மோதியதில் 5 குழந்தைகள் உள்பட 7 பேர் படுகாயமடைந்துள்ளனர்.
உத்தரப் பிரதேசத்தின் படோஹி மாவட்டத்தில் லாரி ஒன்று வேகமாக வந்துகொண்டிருந்த போது, எதிரே வந்த தனியார் பள்ளி பேருந்து, லாரி மீது மோதியது. இந்த விபத்தில் ஐந்து குழந்தைகள் உள்பட 7 பேர் படுகாயமடைந்துள்ளனர். காயமடைந்தவர்கள் அனைவரும் அருகில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்க்கப்பட்டுள்ளனர். இதில் ஒரு குழந்தை மற்றும் பேருந்து ஓட்டுநரின் நிலைமை கவலைக்கிடமாக உள்ளதாக மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர்.
புதன்கிழமை காலை நெவாடா அருகே இந்த விபத்து நடந்ததாகவும், விபத்து ஏற்படுத்திய லாரியை பறிமுதல் செய்து, போலீஸ் விசாரணை மேற்கொண்டு வருவதாகவும் காவல்துறை அதிகாரி ரம்பதன் சிங் தெரிவித்தார்.