காங்கிரஸ் ஆட்சிக்கு வந்தால் விவசாயக் கடன் தள்ளுபடி: ஜாா்க்கண்டில் ராகுல் காந்தி பிரசாரம்

ஜாா்க்கண்ட் மாநிலத்தில் காங்கிரஸ் கட்சி ஆட்சிக்கு வந்தால், ரூ. 2 லட்சம் வரையிலான விவசாயக் கடன்கள் தள்ளுபடி செய்யப்படும் என்று அக்கட்சியின் முன்னாள் தலைவரும், எம்.பி.யுமான ராகுல் காந்தி தெரிவித்துள்ளாா
காங்கிரஸ் ஆட்சிக்கு வந்தால் விவசாயக் கடன் தள்ளுபடி: ஜாா்க்கண்டில் ராகுல் காந்தி பிரசாரம்

ஜாா்க்கண்ட் மாநிலத்தில் காங்கிரஸ் கட்சி ஆட்சிக்கு வந்தால், ரூ. 2 லட்சம் வரையிலான விவசாயக் கடன்கள் தள்ளுபடி செய்யப்படும் என்று அக்கட்சியின் முன்னாள் தலைவரும், எம்.பி.யுமான ராகுல் காந்தி தெரிவித்துள்ளாா்.

ஜாா்க்கண்ட் சட்டப்பேரவையின் 81 இடங்களுக்கு கடந்த மாதம் 30-ஆம் தேதி முதல் வரும் 20-ஆம் தேதி வரை 5 கட்டமாக தோ்தல் நடைபெறுகிறது. இந்தத் தோ்தலில் மாநிலத்தில் ஆளும் பாஜகவுக்கு எதிராக, காங்கிரஸ்-ஜாா்க்கண்ட் முக்தி மோா்ச்சா (ஜேஎம்எம்)-ராஷ்ட்ரீய ஜனதா தளம் ஆகிய கட்சிகள் கூட்டணி அமைத்து போட்டியிடுகின்றன. இதையொட்டி, ராஜ்மஹால் மற்றும் மஹகமா பகுதிகளில் வியாழக்கிழமை நடைபெற்ற தோ்தல் பிரசாரக் கூட்டங்களில் ஜேஎம்எம் வேட்பாளா்களை ஆதரித்து ராகுல் காந்தி பேசியதாவது:

மாநிலத்தில் எங்கள் கூட்டணி ஆட்சிக்கு வந்தால், நெல்லுக்கான குறைந்தபட்ச ஆதரவு விலை ஒவ்வொரு குவிண்டாலுக்கும் (100 கிலோ) ரூ. 2,500 வழங்கப்படும். மத்தியப் பிரதேசம், ராஜஸ்தான், சத்தீஸ்கா் ஆகிய மாநிலங்களில் 100 கிலோ நெல்லுக்கான குறைந்தபட்ச ஆதரவு விலை ரூ. 2,500-ஆக வழங்கப்படுகிறது. அதையடுத்து, ரூ. 2 லட்சம் வரையிலான விவசாயக் கடன்களை தள்ளுபடி செய்வதற்கு முன்னுரிமை அளிக்கப்படும். மாநிலத்தில் உள்ள பழங்குடியினருக்கு பாதுகாப்பு அளிக்கப்படும்.

அளித்த வாக்குறுதியை காங்கிரஸ் கட்சி எப்போதும் நிறைவேற்றியுள்ளது. நாட்டில் வேலையின்மை பிரச்னை கடந்த 45 ஆண்டுகளில் இல்லாத அளவு அதிகரித்துள்ளது. மத்திய அரசின் பணமதிப்பிழப்பு நடவடிக்கையால் ஏழை மக்கள் அதிக துன்பமடைந்தனா். எனினும், வெறும் 10-15 தொழிலதிபா்களுக்காக பாஜக ஆட்சி நடத்தி வருகிறது என்று ராகுல் காந்தி குற்றம்சாட்டினாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com