இஸ்ரோ மூலமாக அரசுக்கு ரூ.1,245 கோடி வருவாய்: மத்திய அரசு தகவல்!

பல்வேறு நாடுகளின் செயற்கைக்கோளை ஏவியதன் மூலமாக இஸ்ரோ நிறுவனம் ரூ.1,245 கோடிக்கு மேல் வருவாய் ஈட்டியுள்ளது என்று மத்திய அரசு தெரிவித்துள்ளது. 
இஸ்ரோ மூலமாக அரசுக்கு ரூ.1,245 கோடி வருவாய்: மத்திய அரசு தகவல்!

கடந்த ஐந்து ஆண்டுகளில் பல்வேறு நாடுகளின் செயற்கைக்கோளை ஏவியதன் மூலமாக இஸ்ரோ நிறுவனம் ரூ.1,245 கோடிக்கு மேல் வருவாய் ஈட்டியுள்ளது என்று மத்திய அரசு தகவல் தெரிவித்துள்ளது. 

இந்திய விண்வெளி ஆராய்ச்சி மையம், விண்வெளித்துறையில் பல்வேறு சாதனைகளை படைத்ததோடு, அரசுக்கு வருவாயும் ஈட்டித் தருகிறது. மாநிலங்களவையில் எழுப்பப்பட்ட கேள்விக்கு பதிலளித்த அணுசக்தி மற்றும் விண்வெளி அமைச்சர் ஜிதேந்திர சிங், கடந்த ஐந்து ஆண்டுகளில் 26 நாடுகளின் செயற்கைக்கோள்களை விண்ணில் செலுத்தியன் மூலம் இஸ்ரோ ரூ.1,245 கோடிக்கு மேல் வருவாய் ஈட்டியுள்ளது என்று தெரிவித்தார். 

மேலும், '2018-19 நிதியாண்டில் இந்தியாவின் அந்நிய செலாவணி வருவாயில் ரூ.91.63 கோடி, இஸ்ரோவின் மூலமாக கிடைத்துள்ளது. 2019ம் நிதியாண்டில் இஸ்ரோவின் வருமானம் ரூ.324.19 கோடியாகவும், 2018ம் நிதியாண்டில் ரூ.232.56 கோடியாகவும் இருந்துள்ளது' என்று கூறினார். 

கடந்த டிசம்பர் 11ம் தேதி அன்று, ரேடார் இமேஜிங் புவி கண்காணிப்பு செயற்கைக்கோள் RISAT-2BR1-யை பி.எஸ்.எல்.வி ராக்கெட்டைப் பயன்படுத்தி சுற்றுப்பாதையில் நிலைநிறுத்தியது. பி.எஸ்.எல்.வி இத்துடன் ஒன்பது வெளிநாட்டு செயற்கைக்கோள்களையும் எடுத்துச் சென்றது.

முன்னதாக, அமெரிக்கா, இங்கிலாந்து, ஜெர்மனி, கனடா, சிங்கப்பூர், நெதர்லாந்து, ஜப்பான், மலேசியா, அல்ஜீரியா மற்றும் பிரான்ஸ் ஆகிய 10 நாடுகளுடன் கடந்த 5 ஆண்டுகளில் ஒப்பந்தங்கள் கையெழுத்திடப்பட்டன. இதுவரை, இந்தியா 1999ம் ஆண்டு முதல் 319 வெளிநாட்டு செயற்கைக்கோள்களை ஏவியுள்ளது என்று மத்திய அரசு தரப்பில் இருந்து தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com