டேட்டா பிரீச்சிக்கில் சிக்கிய டிவிட்டர்: இந்திய பயனாளர்களுக்கு எச்சரிக்கை

டிவிட்டரில் டேட்டா பிரீச் எனப்படும் தகவல் உடைப்பு தரவுகள் ஊடுருவியிருப்பதால் இந்திய பயனாளர்கள் பாதுகாப்பாக இருக்கும்படி டிவிட்டர் நிறுவனம் எச்சரித்துள்ளது.
Twitter admits malicious code
Twitter admits malicious code


புது தில்லி: டிவிட்டரில் டேட்டா பிரீச் எனப்படும் தகவல் உடைப்பு தரவுகள் ஊடுருவியிருப்பதால் இந்திய பயனாளர்கள் பாதுகாப்பாக இருக்கும்படி டிவிட்டர் நிறுவனம் எச்சரித்துள்ளது.

இதன் காரணமாக இந்தியா உட்பட உலக நாடுகளைச் சேர்ந்த சில பயனாளர்களின் தகவல்கள் பாதிக்கப்படலாம் என்றும் அறிவுறுத்தியுள்ளது.

இணையதள பயனாளர்களுக்கு மிகவும் மோசமான ஆண்டாக 2019 அமைந்துவிட்டது. இந்த நிலையில், டிவிட்டருக்குள் சில வேண்டத்தகாத மாலிசியஸ் கோட்கள் ஊடுருவி இருப்பதாக மின்னஞ்சல் மற்றும் டிவிட்டர் மூலம் பயனாளர்களுக்கு எச்சரிக்கை செய்தி வெளியிட்டுள்ளது. 

மாலிசியஸ் கோட்கள் மூலம் சில தகவல்கள் திருடப்படலாம் என்று டிவிட்டர் நிறுவனம் எச்சரித்துள்ளதோடு, உங்களது பாஸ்வேர்டை (கடவுச்சொல்) மாற்றுமாறும், டிவிட்டர் பக்கம் அல்லது ஆப்-பில் இதுபோன்று நடக்கும் போது, பயனாளர்களின் பாஸ்வேர்ட் பொதுவெளியில் வெளியிடப்படும் அபாயம் இருப்பதாகவும், எனவே, குரோம் பயனாளர்கள் பாஸ்வேர்டை மாற்றும்படி பரிந்துரைக்கப்பட்டுள்ளது.

கடந்த சில காலமாக டிவிட்டர், இதுபோன்ற மோசமான ஊடுருவல்களால் பாதிக்கப்பட்டு வருவது குறிப்பிடத்தக்கது.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com