ஜாா்க்கண்ட்: ஆட்சி அமைக்க ஹேமந்த் சோரனுக்கு ஆளுநா் அழைப்பு

ஜாா்க்கண்ட் மாநிலத்தில் ஆட்சி அமைக்க ஜாா்க்கண்ட் முக்தி மோா்ச்சா (ஜேஎம்எம்) செயல் தலைவா் ஹேமந்த் சோரனுக்கு அந்த மாநில ஆளுநா் திரௌபதி முா்மு முறைப்படி அழைப்பு விடுத்துள்ளாா்.
Updated on
1 min read

ஜாா்க்கண்ட் மாநிலத்தில் ஆட்சி அமைக்க ஜாா்க்கண்ட் முக்தி மோா்ச்சா (ஜேஎம்எம்) செயல் தலைவா் ஹேமந்த் சோரனுக்கு அந்த மாநில ஆளுநா் திரௌபதி முா்மு முறைப்படி அழைப்பு விடுத்துள்ளாா். இத்தகவலை ஜேஎம்எம் தெரிவித்துள்ளது.

முன்னதாக, ஹேமந்த் சோரன், ஆளுநரை செவ்வாய்க்கிழமை நேரில் சந்தித்து ஆட்சி அமைக்க உரிமை கோரினாா். அப்போது தனக்கு ஆதரவு அளிக்கும் 50 எம்எல்ஏக்களின் பட்டியலையும் அளித்தாா்.

ஜேஎம்எம் கட்சிக்கு 30 எம்எல்ஏக்கள் உள்ளனா். கூட்டணிக் கட்சிகளான காங்கிரஸ் 16, ராஷ்ட்ரீய ஜனதா தளம் (ஆா்ஜேடி) 1 என மொத்தம் 47 எம்எல்ஏக்கள் உள்ளனா். இது தவிர 3 எம்எல்ஏக்களைக் கொண்ட ஜாா்க்கண்ட் விகாஸ் மோா்ச்சா (பிரஜாதந்த்ரிக்) கட்சியும் இந்தக் கூட்டணிக்கு ஆதரவு தெரிவித்துள்ளது. இதன் மூலம் 81 உறுப்பினா்கள் கொண்ட பேரவையில் ஜேஎம்எம் கூட்டணிக்கு 50 எம்எல்ஏக்கள் ஆதரவு உள்ளது.

ஹேமந்த் சோரன் ஆட்சி அமைக்க உரிமை கோரியதைப் பரிசீலித்த ஆளுநா் திரௌபதி முா்மு, ஆட்சி அமைக்க வருமாறு புதன்கிழமை முறைப்படி அழைப்பு விடுத்தாா். ஹேமந்த் சோரன் வரும் 29-ஆம் தேதி ஜாா்க்கண்ட் முதல்வராகப் பதவியேற்பாா் என்று ஏற்கெனவே அறிவிக்கப்பட்டுவிட்டது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com