
திருவனந்தபுரம்: பராமரிக்கப்பட்டு வந்த யானைகளில் மிகவும் வயதான யானையாகவும், ஆசிய மற்றும் கின்னஸ் சாதனைக்குச் சொந்தக்காரராகவும் விளங்கிய 88 வயது தாட்சாயிணி யானை மரணம் அடைந்தது.
கேரளாவில் உள்ள பாப்பனம்கோடு பகுதியில் இருக்கும் யானைகள் பராமரிப்பு மையத்தில் பராமரிக்கப்பட்டு வந்த தாட்சாயிணி, உடல் நலக் குறைவால் நேற்று உயிரிழந்தது.
2016ம் ஆண்டு இந்த யானைக்கு கஜா முத்தாஸி என்ற பட்டம் வழங்கப்பட்டு, இது கின்னஸ் சாதனை புத்தகத்தில் இடம்பெற்றது. இந்த யானையை சிறப்பிக்கும் வகையில் தபால் உறைகளும் வெளியிடப்பட்டது குறிப்பிடத்தக்கது.

செய்திகள் உடனுக்குடன்... வாட்ஸ்ஆப் சேனலில் 'தினமணி'யைப் பின்தொடர...