
உத்தரப் பிரதேச மாநிலம் முசாஃபர்நகர் மாவட்டத்தை சேர்ந்த சில கிராமங்களில் கடந்த இரு தினங்களுக்குள் 100க்கும் மேற்பட்ட பசுக்கள் உயிரிழந்த நிகழ்வு அங்கு பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
வீடுகளில் வளர்க்கப்பட்டு வரும் நூறுக்கும் மேற்பட்ட பசுக்கள் இரு தினங்களுக்கு முன்பு மேய்ச்சலுக்காக அனுப்பி வைக்கப்பட்டது. அந்தப்பசுக்கள் ஒவ்வொன்றும் ஒன்றன்பின் ஒன்றாக மயங்கி விழுந்து, பின்னர் இறந்தன.
இதுகுறித்து கோட்டாட்சியர் விஜய்குமார் கூறுகையில், மேய்ச்சலுக்கு அனுப்பி வைக்கப்பட்ட மாடுகள் விஷப்புல் உண்டதாலோ அல்லது மாசடைந்த நீரை பருகியது காரணமாகவோ இறந்திருக்க கூடும் என சந்தேகிக்கப்படுகிறது. இதுதொடர்பாக, வருவாய்துறை மற்றும் கால்நடைத்துறையின் விசாரணைக்கு உத்தரவிட்டதன்பேரில் தீவிர விசாரணை நடைபெற்று வருகிறது. விசாரணைக்கு பிறகே பசுக்கள் உயிரிழந்ததற்கான காரணம் குறித்து தெரிய வரும் என்று அவர் தெரிவித்தார்.