சுடச்சுட

  

  ஐஎஸ் உடன் கூட்டு என்பதால் பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியா அமைப்புக்கு தடை: ஜார்கண்ட் அரசு அதிரடி

  By IANS  |   Published on : 12th February 2019 07:27 PM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

  Raghubar_Das_EPS

   

  தென் இந்தியாவில் குறிப்பாக கேரளாவை மையமாக வைத்து இயங்கி வரும் பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியா (பிஎஃப்ஐ) அமைப்புக்கு ஜார்கண்ட் அரசு செவ்வாய்கிழமை முதல் தடை விதித்து அதிரடி நடவடிக்கை எடுத்துள்ளது.

  பகூர் மாவட்டத்தில் அதிக ஆதரவுடன் இயங்கி வரும் பிஎஃப்ஐ அமைப்புக்கு சர்வதேச பயங்கரவாத அமைப்பான ஐஎஸ் உடன் தொடர்புடையது. பிஎஃப்ஐ அமைப்பில் இருந்து பலர் சிரியா சென்று ஐஎஸ் பயங்கரவாத அமைப்பில் இணைந்துள்ளனர்.

  குறிப்பாக தென் இந்தியாவில் அதிலும் கேரளாவில் இருந்து இச்சம்பவங்கள் நடைபெற்றுள்ளன. எனவே ஜார்கண்ட் மாநிலத்தில் இந்த அமைப்புக்கு தடை விதிக்கிறோம் என்று அரசாணை வெளியிட்டுள்ளது.

  முன்னதாக, பிப்ரவரி 20, 2018-ல் அப்போதைய ரகுபர் தாஸ் தலைமையிலான ஜார்கண்ட் அரசும் பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியா அமைப்புக்கு தடை விதித்திருந்தது குறிப்பிடத்தக்கது. ஆனால், இதுதொடர்பாக நடைபெற்ற வழக்கில் கடந்த ஆண்டு ஆகஸ்டு மாதம் தடையை நீக்கி ஜார்கண்ட் உயர் நீதிமன்றம் உத்தரவிட்டது கவனிக்கத்தக்கது.

  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
  google_play app_store
  kattana sevai