
காஷ்மீரில் பாதுகாப்புப் படையினருக்கும், தீவிரவாதிகளுக்கும் இடையே நடந்த துப்பாக்கிச் சண்டையில் வீரர் ஒருவர் வீரமரணமடைந்தார்.
ஜம்மு காஷ்மீர் மாநிலம் புல்வாமா மாவட்டத்தில் பாதுகாப்புப் படையினருக்கும், தீவிரவாதிகளுக்கும் இடையே இன்று கடும் துப்பாக்கிச்சண்டை நடைபெற்றது. இந்த சண்டையில் வீரர் ஒருவர் வீரமரணமடைந்தார். மற்றொரு வீரர் காயமடைந்தார்.
இருதரப்புக்கும் இடையே நடந்த இந்த துப்பாக்கிச்சண்டையில் பயங்கரவாதி ஒருவன் பிடிபட்டுள்ளான். இச்சம்பவம் தொடர்பாக வழக்குப் பதிவு செய்யப்பட்டு விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.