
கேரளம், ஆந்திரம் மாநிலங்களுக்கு காங்கிரஸ் கட்சியின் சார்பில் தேர்தல் குழுக்கள் அமைக்கப்பட்டுள்ளன.
இதுகுறித்து காங்கிரஸ் கட்சி சார்பில் வெளியிடப்பட்டுள்ள அறிவிப்பில் தெரிவிக்கப்பட்டிருப்பதாவது:
காங்கிரஸ் கட்சியின் சார்பில் கேரளம், ஆந்திரம் மாநிலங்களுக்கு தேர்தல் குழு, ஒருங்கிணைப்பு குழு, பிரசார குழு, விளம்பர குழு, ஊடக ஒருங்கிணைப்பு குழு உள்ளிட்ட குழுக்களை கட்சித் தலைவர் ராகுல் காந்தி அமைத்துள்ளார். கேரளத்தில் கட்சியின் ஒருங்கிணைப்பு குழு தலைவராக மேலிடப் பொறுப்பாளர் முகுல் வாஸ்னிக் நியமிக்கப்பட்டுள்ளார். பிரசாரக் குழுத் தலைவராக மூத்த தலைவர் கே. முரளிதரன் நியமிக்கப்பட்டுள்ளார்.
மக்களவைத் தேர்தலுடன் ஆந்திர சட்டப்பேரவைக்கும் தேர்தல் நடைபெறவுள்ளது. இதை கருத்தில் கொண்டு காங்கிரஸ் கட்சியின் ஆந்திர மாநில துணைத் தலைவர் பதவிகள், பொது செயலாளர் பதவிகள் ஆகியவற்றிலும் புதியவர்களை ராகுல் காந்தி நியமித்துள்ளார்.
அஸ்ஸாம், மணிப்பூர், மகாராஷ்டிரம், உத்தரப் பிரதேசம் ஆகிய மாநிலங்களுக்கும் கட்சியின் விவசாயப் பிரிவுகளுக்கு புதிய தலைவர்களை ராகுல் காந்தி நியமித்துள்ளார் என்று அந்த அறிவிப்பில் காங்கிரஸ் கட்சி குறிப்பிட்டுள்ளது.