
தில்லியில் அர்பித் பேலஸ் ஓட்டலில் ஏற்பட்ட தீவிபத்தில் சிக்கி 9 பேர் உயிரிழந்தனர்.
தில்லியில் கரோல்பாக் பகுதியில் உள்ள அர்பித் பேலஸ் ஓட்டலில் இன்று அதிகாலை தீவிபத்து ஏற்பட்டது. இதில் தீயில் கருகி 9 பேர் உயிரிழந்துள்ளனர்.
பலர் படுகாயமடைந்த நிலையில் மருத்துவமனையில் சிகிச்சைப் பெற்று வருகின்றனர்.
28 தீயணைப்பு வாகனங்களில் விரைந்த வீரர்கள் தீயை அணைக்கும் பணியில் ஈடுபட்டுள்ளனர். தீவிபத்திற்கான காரணங்கள் இதுவரை தெரிவரவில்லை.