குஜ்ஜார் சமூகத்தினர் தொடர் போராட்டம்: 3 ரயில்கள் ரத்து 

ராஜஸ்தான் மாநிலத்தில் குஜ்ஜார் சமூகத்தினர் இடஒதுக்கீடு கோரி நடத்தி வரும் போராட்டம் காரணமாக 3 ரயில்கள் ரத்து செய்யப்பட்டுள்ளது.
குஜ்ஜார் சமூகத்தினர் தொடர் போராட்டம்: 3 ரயில்கள் ரத்து 


ராஜஸ்தான் மாநிலத்தில் குஜ்ஜார் சமூகத்தினர் இடஒதுக்கீடு கோரி நடத்தி வரும் போராட்டம் காரணமாக 3 ரயில்கள் ரத்து செய்யப்பட்டுள்ளது. 2 ரயில்கள் வேறு பாதையில் திருப்பிவிடப்பட்டுள்ளது. குஜ்ஜார் சமூகத்தினர் இடஒதுக்கீடு கோரி போராட்டம் நடத்தி வருவதால் அந்தப் பகுதியில் போக்குவரத்து முடங்கியது. 

ராஜஸ்தானில் கல்வி மற்றும் வேலைவாய்ப்பில் தங்கள் சமூகத்தினருக்கு 5 சதவீத இடஒதுக்கீடு அளிக்க கோரி, குஜ்ஜார் சமூகத்தினர் தொடர் போரட்டங்களில் ஈடுபட்டு வருகின்றனர். போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் தேசிய நெடுஞ்சாலைகளிலும், ரயில் தண்டவாளங்களையும்ம மறித்து போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் திடீரென போலீஸார் மீது கற்களை வீசித் தாக்கத் தொடங்கினர். 

இதையடுத்து, வன்முறையாளர்களைக் கலைக்க போலீஸார் தடியடி நடத்தினர். அப்போது வன்முறைக் கும்பலைச் சேர்ந்தவர்கள், 2 போலீஸ் ஜீப் மற்றும் காவலர்கள் வந்த பேருந்துக்கு தீ வைத்தனர். கல்வீச்சில் 4 போலீஸார் காயமடைந்தனர். இதையடுத்து போலீஸார் கண்ணீர் புகைக் குண்டுகளை வீசினர். அப்போதும் வன்முறையாளர்கள் கலையாததால், இறுதியாக 8 முதல் 10 முறை வானத்தை நோக்கி துப்பாக்கியால் சுட்டனர். இதையடுத்து வன்முறையில் ஈடுபட்டவர்கள் சிதறி ஓடினர்.

இதனிடையே, குஜ்ஜார் தலைவர் கிரோரி சிங் பைன்ஸ்லாவுடன் மாநில அரசு பிரதிநிதிகள் ஞாயிற்றுக்கிழமை பேச்சுவார்த்தை நடத்தினர். இதில் எந்த முடிவும் எட்டப்படாததை அடுத்து, இடஒதுக்கீடு கோரிக்கை ஏற்கப்படும் வரை போராட்டம் தொடரும் என்று கிரோரி சிங் அறிவித்தார்.  

இந்நிலையில், வாய் மாதோபூர் மாவட்டத்தில் நடக்கும் போராட்டங்கள் காரணமாக 3 ரயில்கள் ரத்து செய்யப்பட்டன, 2 ரயில்கள் மாற்றுப் பாதையில் திருப்பி அனுப்பப்பட்டுள்ளது. இணைய சேவைகள் தொடர்ந்து நிறுத்தப்பட்டுள்ளது. 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com