
மாதாந்திர பூஜைக்காக சபரிமலை ஐயப்பன் கோயில் நடை செவ்வாய்க்கிழமை திறக்கப்பட்டது. நடை திறப்பு குறித்து, கோயில் நிர்வாகிகள் செய்தியாளர்களிடம் திங்கள்கிழமை கூறுகையில்,
மாசி மாதத்தையொட்டி, சிறப்பு பூஜைக்காக கோயில் நடை செவ்வாய்க்கிழமை திறக்கப்படுகிறது. மேல்சாந்தி வாசுதேவன் நம்பூதிரி கோயில் நடையைத் திறந்து வைக்கிறார். வரும் 17-ஆம் தேதி வரை கோயில் நடை திறந்திருக்கும்.
மாதாந்திர பூஜையின்போது, களபாபிஷேகம், சஹஸ்ரகலசம், லக்ஷார்ச்சனை உள்ளிட்ட பூஜைகள் நடத்தப்படும். இப்பூஜைகளின்போது தந்திரி கண்டரரு ராஜீவரு உடனிருப்பார் என்றனர்.
மகர விளக்கு பூஜை முடிந்து கடந்த மாதம் 20-ஆம் தேதி கோயில் நடை மூடப்பட்டது குறிப்பிடத்தக்கது.

செய்திகள் உடனுக்குடன்... வாட்ஸ்ஆப் சேனலில் 'தினமணி'யைப் பின்தொடர...