காஷ்மீர் மட்டும் வேண்டும், காஷ்மீர் மக்கள் வேண்டாமா? சிதம்பரம் கேள்வி

சிலர் காஷ்மீர் மட்டும் இந்தியாவின் ஒரு அங்கமாக வேண்டும் என்று நினைக்கிறார்கள், ஆனால், காஷ்மீர் மக்களும் இந்தியர்கள்தான் என்று நினைப்பதில்லை என முன்னாள் மத்திய அமைச்சர் சிதம்பரம் கூறியுள்ளார்.
காஷ்மீர் மட்டும் வேண்டும், காஷ்மீர் மக்கள் வேண்டாமா? சிதம்பரம் கேள்வி


புது தில்லி: சிலர் காஷ்மீர் மட்டும் இந்தியாவின் ஒரு அங்கமாக வேண்டும் என்று நினைக்கிறார்கள், ஆனால், காஷ்மீர் மக்களும் இந்தியர்கள்தான் என்று நினைப்பதில்லை என முன்னாள் மத்திய அமைச்சர் சிதம்பரம் கூறியுள்ளார்.

காஷ்மீர் மற்றும் காஷ்மீர் மக்களுக்கு எதிராக எழுப்பப்படும் வாதங்கள் மனதை அழுத்துவதாகக் கூறியிருக்கும் சிதம்பரம், காஷ்மீரில் உற்பத்தியாகும் பொருட்களை வாங்க வேண்டாம் மற்றும் காஷ்மீருக்கு சுற்றுலா செல்ல வேண்டாம் என்ற கொள்கையை வலியுறுத்தி மேகாலயா ஆளுநர் தத்தகட்டா ராய் பேசிய பேச்சுக்குக் கடும் கண்டனம் தெரிவித்துள்ளார்.

இதற்கு பதிலடி கொடுக்கும் வகையில், சிதம்பரம் தனது டிவிட்டர் பக்கத்தில் பதிவிட்டிருப்பதாவது, நமக்கு காஷ்மீர் மட்டும் இந்தியாவின் ஒரு அங்கமாக வேண்டும், ஆனால் காஷ்மீர் மக்களும் இந்தியர்கள்தான் என்பதை ஏற்றுக் கொள்ள முடியாது என்று பதிவிட்டுள்ளார்.

புல்வாமா தாக்குதலுக்குப் பிறகு இந்தியாவின் பல்வேறு பகுதிகளிலும் பணியாற்றும் அல்லது படித்து வரும் காஷ்மீர் இளைஞர்களுக்கு அச்சுறுத்தல் ஏற்பட்டிருக்கும் நிலை குறித்தும், சில இளைஞர்கள் தங்களது வேலை மற்றும் கல்வியை விட்டுவிட்டு வீடு திரும்பியது குறித்தும் சிதம்பரம் சுட்டிக்காட்டியுள்ளார்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com