
சபரிமலையில் பெண்கள் இருவர் சுவாமி தரிசனம் செய்ததை அடுத்து கோயில் நடையை அடைத்ததற்கு எதிர்ப்பு தெரிவித்து தந்திரிக்கு எதிராக தாக்கல் செய்யப்பட்ட நீதிமன்ற அவமதிப்பு மனுவை உடனடியாக விசாரிக்க உச்சநீதிமன்றம் மறுத்துவிட்டது. சபரிமலையில் அனைத்து வயதுப் பெண்களும் சுவாமி தரிசனம் செய்ய அனுமதிக்கலாம் என்று உச்சநீதிமன்றத் தீர்ப்புக்கு எதிரான மனுக்களுடன் சேர்த்து இந்த மனு விசாரிக்கப்படும் என்று தலைமை நீதிபதி ரஞ்சன் கோகோய், நீதிபதி எஸ்.கே.கௌல் ஆகியோர் அடங்கிய அமர்வு தெரிவித்தது.