
புது தில்லி: தில்லியில் தொழிற்சாலை ஒன்றில் நேற்று இரவு எரிவாயு உருளை வெடித்துச் சிதறியதால் சிறுவன் உட்பட 6 பேர் பலியாகினர்.
மின் விசிறியின் இறக்கைகளுக்கு பெயிண்ட் அடிக்கும் தொழிற்சாலையில் எரிவாயு சிலிண்டர் வெடித்துச் சிதறியதில் இந்த விபத்து நேரிட்டது. தீயணைப்புப் படையினர் வருவதற்குள், தொழிற்சாலையின் ஒரு பகுதி இடிந்து விழுந்தது. விரைந்து வந்த தீயணைப்புப் படையினர் தீயை அணைத்து மீட்புப் பணியில் ஈடுபட்டனர்.
இதுவரை கட்டடத்துக்குள் இருந்து 15 பேர் மீட்கப்பட்டுள்ளனர். மேலும் 6 அல்லது 7 பேர் கட்டடத்துக்குள் சிக்கியிருக்கலாம் என்று அஞ்சப்படுகிறது.