அஸ்ஸாம் மாநில சட்டப்பேரவை மற்றும் உள்ளாட்சி அமைப்புகளில் அந்ந மாநில மக்களுக்கு போதிய இடஒதுக்கீடு வழங்குவது குறித்து ஆய்வு செய்வதற்காக உயர்நிலைக் குழு ஒன்றை மத்திய அரசு அமைத்துள்ளது. இதுதொடர்பான அறிவிக்கை கடந்த 5-ஆம் தேதி வெளியிடப்பட்டுள்ளது. மத்திய சுற்றுலாத் துறையின் முன்னாள் செயலாளர் பேஸ்பரூவா தலைமையில் அமைக்கப்பட்டுள்ள இந்தக் குழுவின் ஆய்வறிக்கையை 6 மாதங்களுக்குள் சமர்ப்பிக்க வேண்டும் என்று அறிவுறுத்தப்பட்டுள்ளது.
கடந்த 1985-ஆம் ஆண்டில் அஸ்ஸாம் மாநில அரசுடன், மத்திய அரசு செய்துகொண்ட ஒப்பந்தத்தில் இடஒதுக்கீடு, கலாசார மேம்பாடு உள்ளிட்ட பல்வேறு வாக்குறுதிகள் இடம்பெற்றன. அதன்படி இடஒதுக்கீடு குறித்து ஆராய்வதற்கான உயர்நிலைக் குழுவை மத்திய உள்துறை அமைச்சகம் அமைத்துள்ளது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.