உலக சாதனை முயற்சி: 5 ஆயிரம் கிலோ கிச்சடி சமைத்தது தில்லி பாஜக!

தில்லி பாஜகவின் ஒடுக்கப்பட்டோர் பிரிவு சார்பில் "பீம் மகா சங்கம்' என்ற பெயரில் தில்லி ராம் லீலா மைதானத்தில் ஞாயிற்றுக்கிழமை மாபெரும் பேரணி நடைபெற்றது.
உலக சாதனை முயற்சி: 5 ஆயிரம் கிலோ கிச்சடி சமைத்தது தில்லி பாஜக!

தில்லி பாஜகவின் ஒடுக்கப்பட்டோர் பிரிவு சார்பில் "பீம் மகா சங்கம்' என்ற பெயரில் தில்லி ராம் லீலா மைதானத்தில் ஞாயிற்றுக்கிழமை மாபெரும் பேரணி நடைபெற்றது. இந்தப் பேரணியில் கின்னஸ் சாதனையில் இடம் பெறும் வகையில் 5,000 கிலோ கிச்சடி தயாரிக்கப்பட்டது. இது ராம்லீலா மைதானத்தில் குழுமிய சுமார் 25,000 பேருக்கு பகிர்ந்தளிக்கப்பட்டது.
 "இந்தக் கிச்சடியைத் தயாரிக்க 400 கிலோ அரிசி, 100 கிலோ பயறு, 350 கிலோ காய்கறி, 100 கிலோ நெய், 100 லிட்டர் எண்ணெய், 2,500 லிட்டர் தண்ணீர், 250 கிலோ மசாலா ஆகியவை பயன்படுத்தப்பட்டன. இவை 3 லட்சம் ஒடுக்கப்பட்டோர் குடும்பங்களில் இருந்து பெறப்பட்டன. ஜாதி ரீதியான ஏற்றத் தாழ்வுகளைக் களைந்து ஒற்றுமையாக வாழ வேண்டும் என்பதை வலியுறுத்தவே இந்த முயற்சி எடுக்கப்பட்டுள்ளது. நாக்பூரில் விஷ்ணு மனோகர் என்பவர் சமைத்த 3,000 கிலோ கிச்சடிதான் உலக சாதனையாக பதிவாகி உள்ளது. தற்போது 5,000 கிலோ கிச்சடியை விஷ்ணு மனோகரே தில்லியில் சமைத்துள்ளார்' என்று தில்லி பாஜக தலைவர் மனோஜ் திவாரி தெரிவித்தார்.
 
 
 
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com