தெலங்கானா பாஜக எம்எல்ஏ பதவியேற்க மறுப்பு

தெலங்கானா மாநில பாஜக எம்எல்ஏ டி. ராஜா சிங் பதவியேற்க மறுப்பு தெரிவித்துள்ளார்.
தெலங்கானா பாஜக எம்எல்ஏ பதவியேற்க மறுப்பு

தெலங்கானா மாநில பாஜக எம்எல்ஏ டி. ராஜா சிங் பதவியேற்க மறுப்பு தெரிவித்துள்ளார்.
 தெலங்கானா சட்டப்பேரவையின் முதல் கூட்டத் தொடர் வரும் 17ஆம் தேதி தொடங்குகிறது. இதில் சட்டப்பேரவை இடைக்காலத் தலைவராக நியமிக்கப்பட்டுள்ள மஜ்லீஸ் கட்சி எம்எல்ஏ மும்தாஜ் அகமது கான் முன்பு புதிய எம்எல்ஏக்கள் அனைவரும் பதவியேற்கவுள்ளனர்.
 இதை சுட்டிக்காட்டி, சட்டப்பேரவை இடைக்காலத் தலைவர் மும்தாஜ் அகமது கான் முன்னிலையில் எம்எல்ஏவாக பதவியேற்க முடியாது என்று டி.ராஜா சிங் மறுப்பு தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள விடியோ செய்தியில், "ஹைதராபாத் நிஜாமை பின்பற்றும் சந்திரசேகர் ராவ், சட்டப்பேரவை இடைக்காலத் தலைவராக மும்தாஜ் அகமது கானை நியமித்துள்ளார். அவரது முன்னிலையில் பிறர் பதவியேற்கலாம். ஆனால் நான் பதவியேற்க மாட்டேன். சட்டப்பேரவைக்கும் செல்ல மாட்டேன். ஹிந்துக்களுக்கு எதிராக மஜ்லீஸ் கட்சி பேசி வருகிறது. வந்தே மாதரம், பாரத் மாதா கீ ஜே எனவும் தெரிவிக்க மறுத்து வருகிறது. அப்படியிருக்கும்போது, மஜ்லீஸ் கட்சியைச் சேர்ந்த மும்தாஜ் அகமது கான் முன்பு நான் எப்படி எம்எல்ஏவாக பதவியேற்க முடியும்' எனக் குறிப்பிட்டுள்ளார்.
 ராஜா சிங்கின் அறிவிப்பு குறித்து மஜ்லீஸ் கட்சியின் கருத்தை செய்தியாளர்கள் அறிய முயன்றனர். ஆனால் அக்கட்சி கருத்து தெரிவிக்க விரும்பவில்லை என்று கூறிவிட்டது.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com