விஐபிகளின் பாதுகாப்பு வாபஸ்: 1300 வீரர்களுக்குக் கிடைத்தது சுதந்திரம்!

நாட்டில் இதுவரை வழங்கப்பட்டு வந்த 350 பேருக்கு விஐபிகளுக்கான பாதுகாப்பு விலக்கிக் கொள்ளப்பட்டதால் சுமார் 1,300 மத்திய தொழிற் பாதுகாப்புப் படை வீரர்கள் சுதந்திரம் பெற்றுள்ளனர்.
விஐபிகளின் பாதுகாப்பு வாபஸ்: 1300 வீரர்களுக்குக் கிடைத்தது சுதந்திரம்!


புது தில்லி: நாட்டில் இதுவரை வழங்கப்பட்டு வந்த 350 பேருக்கு விஐபிகளுக்கான பாதுகாப்பு விலக்கிக் கொள்ளப்பட்டதால் சுமார் 1,300 மத்திய தொழிற் பாதுகாப்புப் படை வீரர்கள் சுதந்திரம் பெற்றுள்ளனர்.

இதுவரை விஐபிகளின் பாதுகாப்புக்காக பணியமர்த்தப்பட்டிருந்த வீரர்கள், பிற பொறுப்புகளில் பணியமர்த்தப்பட்டுள்ளனர். எனினும், சிஆர்பிஎஃப், சிஐஎஸ்எஃப், என்எஸ்ஜி, தில் காவல் படை என 3000க்கும் மேற்பட்ட வீரர்கள் முக்கியப் பிரமுகர்களுக்கான பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.

இந்த நிலையில், நரேந்திர மோடி இரண்டாவது முறை பிரதமராக பதவியேற்றுக் கொண்ட பிறகு, விஐபிகளுக்கு வழங்கப்பட்டு வந்த பாதுகாப்பு மறுபரிசீலனை செய்யப்பட்டது. 

இந்தியாவில் இருக்கும் விஐபிகளுக்கு பாதுகாப்பு என்ற பெயரில், பெரிய  அளவில் பாதுகாப்புப் படை வீரர்களின் திறன் வீணடிக்கப்பட்டு வந்த நிலையில், இதுவரை வழங்கப்பட்டு வந்த இசட் பிளஸ் மற்றும் இசட் பாதுகாப்பு பல விஐபிகளுக்கு விலக்கப்பட்டுள்ளது. அதோடு சில விஐபிகளுக்கான பாதுகாப்பு திரும்பப் பெறப்பட்டும், சில விஐபிகளுக்கான பாதுகாப்பில் மாற்றம் செய்யப்பட்டும் மத்திய அரசு நடவடிக்கை எடுத்தது.

விஐபிகளுக்கு இருக்கும் உயிர் அச்சுறுத்தலை அடிப்படையாக வைத்து அவர்களுக்கு பாதுகாப்பு வழங்கப்பட்டு வந்தது. தற்போது நடைபெற்ற மறுபரிசீலனையில், சில விஐபிகளுக்கு உள்ளூர் காவல்துறையின் பாதுகாப்பே போதுமானது என்ற அளவிலும் மாற்றியமைக்கப்பட்டுள்ளது.

உச்சபட்ச பாதுகாப்புக்கு தேசிய பாதுகாப்புப் படையும், அடுத்த நிலை விஐபிகளுக்கு இசட் பிரிவும் வழங்கப்படும். இந்த மறுபரிசீலனையின் மூலம், பிகார் முன்னாள் முதல்வர் லாலு, மக்களவை முன்னாள் தலைவர் மீரா குமார், முன்னாள் குடியரசுத் தலைவர் பிரணாப் முகர்ஜி, முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங் ஆகியோரின் பேரன் பேத்திகளுக்கு வழங்கப்பட்டிருந்த  இசட் பிரிவு பாதுகாப்பு விலக்கிக் கொள்ளப்பட்டுள்ளது.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com