போர் உச்சத்தில் இருந்தபோது நான் கார்கிலுக்குச் சென்றேன்: பிரதமர் மோடி

கார்கில் போர் உச்சத்தில் இருந்தபோது நான் அங்கு சென்றேன், அது எனக்கு யாத்திரை போன்றது என்று பிரதமர் மோடி இன்று (சனிக்கிழமை) தெரிவித்தார். 
போர் உச்சத்தில் இருந்தபோது நான் கார்கிலுக்குச் சென்றேன்: பிரதமர் மோடி
Published on
Updated on
1 min read


கார்கில் போர் உச்சத்தில் இருந்தபோது நான் அங்கு சென்றேன், அது எனக்கு யாத்திரை போன்றது என்று பிரதமர் மோடி இன்று (சனிக்கிழமை) தெரிவித்தார். 

கார்கில் போர் வெற்றியின் 20-ஆம் ஆண்டு நினைவு தின நிகழ்ச்சியில் பிரதமர் மோடி பங்கேற்று பேசினார். அப்போது, மறைமுகமான யுத்தங்களுக்கு எதிராக உலக நாடுகள் ஒன்றிணைந்து நடவடிக்கைகளை எடுப்பதற்கான நேரம் வந்துவிட்டது என்று பாகிஸ்தானை மறைமுகமாக தாக்கி பேசினார். 

இந்த நிகழ்ச்சியில் பிரதமர் மோடி பேசியதாவது, 

"கார்கில் போர் மூலம் இந்தியாவின் வரைபடத்தை மாற்றியமைக்க பாகிஸ்தான் முற்பட்டது. ஆனால், இந்திய பாதுகாப்புப் படைகள் அதை முறியடித்தன. கார்கில் வெற்றி, இந்தியாவின் திறன், உறுதி மற்றும் வலிமையின் அடையாளம். போர் என்பது அரசுகள் சண்டையிட்டுக்கொள்வதல்ல. ஒட்டுமொத்த நாடே சண்டையிட்டுக்கொள்வது. கார்கில் வெற்றி இன்றைக்கும் ஒட்டுமொத்த நாட்டையும் ஈர்க்கிறது. அது ஒவ்வொரு இந்தியரின் வெற்றியாகும்.  

கார்கில் போர் உச்சத்தில் இருந்தபோது நான் அங்கு சென்றேன். அது எனக்கு யாத்திரை போன்றது.

இந்தியா பாதுகாப்பாக இருந்தால் மட்டுமே வளர்ச்சி என்பது சாத்தியமாகும். நாட்டின் பாதுகாப்பு என்று வந்துவிட்டால் நாங்கள் எந்தவித அழுத்தத்துக்கும் ஆளாகமாட்டோம். பாதுகாப்புப் படைகளை நவீனப்படுத்துவதே அரசின் தலையாய நோக்கமாக இருக்கும்.

சில நாடுகள் பயங்கரவாதத்தைப் பரப்புவதற்காக மறைமுக யுத்தத்தை கையாளுகின்றனர். உலக நாடுகள் இணைந்து அதை எதிர்கொள்வதற்கான நேரம் வந்துவிட்டது" என்றார்.

இந்த நிகழ்ச்சியில் பல்வேறு ராணுவ அதிகாரிகள் மற்றும் முன்னாள் ராணுவ வீரர்கள் பங்கேற்றனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.