முத்தலாக் மசோதா: மாநிலங்களவையில் அதிமுக எம்.பிக்கள் வெளிநடப்பு 

முத்தலாக் மசோதா விவகாரத்தில் மாநிலங்களவையில் இருந்து அதிமுக எம்.பிக்கள் வெளிநடப்பு செய்துள்ளனர்.
முத்தலாக் மசோதா: மாநிலங்களவையில் அதிமுக எம்.பிக்கள் வெளிநடப்பு 

புது தில்லி: முத்தலாக் மசோதா விவகாரத்தில் மாநிலங்களவையில் இருந்து அதிமுக எம்.பிக்கள் வெளிநடப்பு செய்துள்ளனர்.

மக்களவையில் நிறைவேற்றப்பட்டுவிட்ட நிலையில் செவ்வாயன்று  மாநிலங்களவையில் முத்தலாக் மசோதாவைத் மத்திய சட்ட அமைச்சர் ரவி ஷங்கர் பிரசாத் தாக்கல் செய்தார்.

முன்னதாக மக்களவையில் இம்மசோதா குறித்த விவாதம் நடைபெற்ற போது அதிமுகவின் ஒரே மக்களவை உறுப்பினரான தேனி ஓ.பி.ரவீந்திரநாத், முத்தலாக் சட்டத்தை ஆதரித்து பேசி வாக்களித்தார். இது இஸ்லாமியர்கள் மத்தியில் பெரும் அதிருப்தியை அதிமுக மீது ஏற்படுத்தி இருந்தது.

அதேசமயம் செவ்வாய் மதியம் மாநிலங்களவையில் இந்த மசோதா மீதான விவாதத்தில் பேசிய அதிமுக மாநிலங்களவை குழுத் தலைவரான நவநீதகிருஷ்ணன், 'இந்த மசோதாவை நாடாளுமன்ற சிறப்புக் குழுவின் பரிசீலனைக்கு அனுப்ப வேண்டும்' என்று பேசினார்.

முன்னதாக அதிமுக மாநிலங்களவை உறுப்பினரான எஸ்.ஆர். பாலசுப்ரமணியனும் இதே கோரிக்கையை வலியுறுத்தி கடிதம் எழுதியிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

இந்நிலையில் முத்தலாக் மசோதா விவகாரத்தில் மாநிலங்களவையில் இருந்து அதிமுக எம்.பிக்கள் வெளிநடப்பு செய்துள்ளனர்.

மசோதா மீதான விவகாரத்தில் பேசிய அதிமுக எம்.பியான எஸ்.ஆர். பாலசுப்ரமணியன், 'இந்த மசோதாவின் ஒரு சில பிரிவுகளில் எங்களுக்கு உடன்பாடு இல்லை. இது சமூகத்தில் உண்டாக்க கூடிய விளைவுகளையும் கருத்தில் கொண்டு, சிறப்புக்குழுவுக்கு அனுப்ப வேண்டும' என்று வலியுறுத்தி விட்டு, அதிமுக உறுப்பினர்கள் வெளிநடப்பு செய்வதாக தெரிவித்தார். இதையடுத்து அப்போது அவையில் இருந்த அதிமுக உறுப்பினர்கள் வெளியேறினார்கள்.

எனவே இந்த மசோதா மீதான ஓட்டெடுப்பில் பங்கு பெற்று ஆதரித்தோ எதிர்த்தோ வாக்களிக்காமல், விவாதம் நிறைவடையும் முன்னரே அதிமுக வெளிநடப்பு செய்துள்ளது குறிப்பிடத்தக்கது.     

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com