பெற்றோர் வாங்கிய கடனுக்காக அலிகாரில் 3 வயது சிறுமி கொடூரக் கொலை: கொந்தளிக்கும் சமூகம்

உத்தரப்பிரதேச மாநிலத்தில் பெற்றோர் வாங்கிய கடனுக்காக அலிகாரைச் சேர்ந்த 3 வயது சிறுமி கொடூரக் கொலை செய்யப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
பெற்றோர் வாங்கிய கடனுக்காக அலிகாரில் 3 வயது சிறுமி கொடூரக் கொலை: கொந்தளிக்கும் சமூகம்
Published on
Updated on
1 min read


அலிகார்: உத்தரப்பிரதேச மாநிலத்தில் பெற்றோர் வாங்கிய கடனுக்காக அலிகாரைச் சேர்ந்த 3 வயது சிறுமி கொடூரக் கொலை செய்யப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

அலிகாரைச் சேர்ந்த 3 வயது சிறுமி கடத்தப்பட்டு, இரண்டு நாட்களுக்குப் பிறகு குப்பைத் தொட்டியில் சடலமாக மீட்கப்பட்டார். அவரது கண்கள் தோண்டப்பட்டு, கைகள் வெட்டப்பட்ட நிலையில் சடலம் கண்டெடுக்கப்பட்டது குறித்து அறிந்த பொதுமக்கள் கடும் அதிர்ச்சி அடைந்தனர். காவல்துறைக்கு எதிராக போராட்டங்களும் நடத்தப்பட்டன.

கடன் பிரச்னையில், கடனைத் திருப்பித் தராதவரின் 3 வயது மகளைக் கடத்திச் சென்று, கொடூரமாகக் கொலை செய்த குற்றத்துக்காக ஸாஹித் மற்றும் அஸ்லாம் ஆகியோர் கைது செய்யப்பட்டனர். 

இந்த வழக்கை தேசிய பாதுகாப்புச் சட்டத்தின் கீழ் விசாரிக்க அலிகார் காவல்துறை முடிவு செய்துள்ளது. விரைவு நீதிமன்றத்தில் வைத்து விசாரித்து விரைவான நீதி கிடைக்கவும் காவல்துறை நடவடிக்கை எடுக்க உள்ளது.

3 மருத்துவர்கள் முன்னிலையில் நடந்த பிரேத பரிசோதனையில் பாலியல் துன்புறுத்தலோ ஆசிட் பயன்பாடோ இல்லை என்பது தெரிய வந்துள்ளது. இந்த சம்பவத்தில் தொடர்புடைய 2 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். வழக்கில் மெத்தனமாக இருந்த 5 காவலர்கள் பணியிடை நீக்கம் செய்யப்பட்டுள்ளனர்.
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com