
சே குவாரா, ஃபிடல் காஸ்ட்ரோவை பேட்டி கண்ட தமிழகத்தின் மூத்த பத்திரிகையாளர் இ.கோபிநாத் (88) சனிக்கிழமை மறைந்தார்.
ஏஎன்ஐ செய்தி நிறுவனத்தின் தமிழக ஆசிரியராக கடந்த 30 ஆண்டுகளுக்கும் மேலாக பணியாற்றி வந்த இ.கோபிநாத், கடந்த 60 ஆண்டுகளுக்கு முன்பு பத்திரிகையாளராக தனது பணியை தொடங்கியவர்.
சுதந்திரத்துக்குப் பின்னர் பிடிஐ செய்தி நிறுவனத்துக்காக நாட்டின் முதலாவது தேர்தல் செய்திகளை தொகுத்து வழங்கியவர். சமீபத்தில் நடந்து முடிந்த 17-ஆவது மக்களவைத் தேர்தல் வரை பணிகளைத் தொடர்ந்தவர்.
அதுமட்டுமல்லாமல் சே குவாரா மற்றும் ஃபிடல் காஸ்ட்ரோ ஆகியோரை பேட்டி கண்ட நாட்டின் முதல் பத்திரிகையாளர் என்ற பெருமையைப் பெற்றவர்.
அவருடைய மறைவுக்கு பத்திரிகையாளர்கள் தங்கள் அஞ்சலியை செலுத்தி வருகின்றனர்.